“இலங்கை பாரதிய ஜனதா கட்சி” ஆரம்பம்!! பொதுச்செயலாளராக சிரேஷ்ட ஊடகவியலாளர் இந்திரஜித்!!

“இலங்கை பாரதிய ஜனதா கட்சி” ஆரம்பம்!! பொதுச்செயலாளராக சிரேஷ்ட ஊடகவியலாளர் இந்திரஜித்!!

இலங்கை பாரதிய ஜனதாக் கட்சி’ எனும் பெயரில்  யாழ்ப்பாணத்தில் புதியதொரு அரசியல் கட்சி இன்று உதயமாகியுள்ளது.

 யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பை அக்கட்சியின் தலைவர் வி.முத்துசாமியினால் விடுக்கப்பட்டது.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” இலங்கை பாரதிய ஜனதாக்கட்சி என்ற புதிய அரசியல் கட்சி ஒன்றை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம்.

இந்தக்ககட்சி அரசியல் என்ற முன்னிலைப்படுத்தாது. அந்த அரசியலுக்கு தமிழ் பேசும் மக்களை தயார்ப்படுத்தும் அல்லது பக்குவப்படுத்தும் செயற்பாடுகளை முன்னெடுக்கும்.

இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் மலையகத்தை சேர்ந்த சிரேஷ்ட ஊடகவியலாளரான இந்திரஜித் அவர்களும் கலந்து கொண்டார். அவர் கட்சியின் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

administrator

Related Articles