இலங்கை லெஜன்ட்ஸ் அணி வெற்றி

இலங்கை லெஜன்ட்ஸ் அணி  வெற்றி


இலங்கை லெஜன்ட்ஸ் அணி மேற்கிந்திய தீவுகள் லெஜன்ட்ஸ் அணியை வீழ்த்தி வெற்றியீட்டியுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

இதன்படி களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் நான்கு விக்கட்டுகளை இழந்து 157 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

நட்சத்திர துடுப்பாட்ட வீரர் பிரயன் லாரா ஆட்டமிழக்காது 53 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.

பந்து வீச்சில் சின்தக்க ஜயசிங்க மற்றும் திலகரட்ன தில்ஷான் ஆகியோர் தலா ஒரு விக்கட்டை வீழ்த்தினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 19 ஓவர்களில் ஐந்து விக்கட்டுகளை இழந்து 160 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

இதில் உபுல் தரங்க 53 ஓட்டங்களையும் திலகரட்ன தி;ல்ஷான் 47 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பந்து வீச்சில் ரினோ பெஸ்ட் இரண்டு விக்கட்டுகளை வீழ்த்தினார்.
போட்டியின் ஆட்டநாயகனாக உபுல் தரங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

administrator

Related Articles