இலங்கை லெஜன்ட்ஸ் இறுதிப் போட்டிக்குத் தகுதி

இலங்கை லெஜன்ட்ஸ் இறுதிப் போட்டிக்குத் தகுதி

டுவன்ரி20 போட்டித் தொடரின் இறுதிப் போட்டிக்கு இலங்கை லெஜன்ட்ஸ் அணி தகுதி பெற்றுக்கொண்டுள்ளது.

சற்று நேரத்திற்கு முன்னர் நிறைவடைந்த அரையிறுதிப் போட்டியில் தென் ஆபிரிக்க அணியை வீழ்த்தி இலங்கை வெற்றியை பதிவு செய்துள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

இதன்படி களமிறங்கிய தென் ஆபிரிக்க லெஜன்ட்ஸ் அணி நிர்ணயிக்கப்படட்ட 20 ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து 125 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

இதில் Morne van Wyk  47 பந்துகளில் 53 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார். ஏனைய வீரர்கள் எவரும் சோபிக்கவில்லை.

பந்து வீச்சில் நட்சத்திர பந்து வீச்சாளர் நுவான் குலசேகர 25 ஓட்டங்களுக்கு ஐந்து விக்கட்டுகளை வீழ்த்தினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 17.2 ஓவர்களில் இரண்டு விக்கட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

இதில் சிந்தக்க ஜயசிங்க 25 பந்துகளில் ஆட்டமிழக்காது 47 ஓட்டங்களையும், உபுல் தரங்க 39 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

administrator

Related Articles