இலங்கை வந்த லோஸ்லியா 14 நாட்கள் சுய தனிமை!

இலங்கை வந்த லோஸ்லியா 14 நாட்கள் சுய  தனிமை!

பிக்பாஸ் புகழ் லோஸ்லியா மரியநேசன், இலங்கையை வந்தடைந்துள்ளார்.

லொஸ்லியா இலங்கையை வந்தடைந்துள்ளதாக அவரது நண்பர் தனது டுவிட்டர் பக்கத்தில் தகவல் வெளியிட்டுள்ளார்.

இலங்கைக்கு வருகைத் தந்துள்ள லோஸ்லியா, 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

தனிமைப்படுத்தலின் பின்னர், லோஸ்லியா, தனது குடும்பத்தாரை சந்திப்பார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

லோஸ்லியாவின் தந்தை மரியநேசன், சுகயீனம் காரணமாக கடந்த வாரம் காலமானார்.

கனடாவிலுள்ள தனது வீட்டில் வைத்தே, அவர் உயிரிழந்திருந்தார்.

மாரடைப்பே உயிரிழப்புக்கான காரணம் என உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

மரியநேசனின் பூதவுடலை இலங்கைக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆனாலும அதில் நடைமுறை சிக்கஸ்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

administrator

Related Articles