இஸ்லாமிய‌ பெண்க‌ளின் க‌லாசார‌த்துக்கு மாறியதில் என்ன‌ த‌வ‌று ? முபராக் மௌலவி கேள்வி!!

இஸ்லாமிய‌ பெண்க‌ளின் க‌லாசார‌த்துக்கு மாறியதில் என்ன‌ த‌வ‌று ? முபராக் மௌலவி கேள்வி!!

முஸ்லிம் பெண்க‌ளின் ஆடை க‌லாசார‌ம் முன்பு போல் அல்லாது சில‌ வ‌ருட‌ங்க‌ளாக‌ மாறிக்கொண்டிருப்ப‌த‌னால்த்தான் பெண்க‌ள் முக‌ம் மூடும் ச‌ட்ட‌ம் கொண்டு வ‌ருவ‌து ப‌ற்றி சிந்திக்க‌ வேண்டியுள்ள‌து என‌ அர‌சின் பேச்சாள‌ர் அமைச்ச‌ர் கெஹ‌லிய‌ ர‌ம்புக்க‌ண‌ பேசியுள்ள‌மை க‌வ‌லைக்குரிய‌தாகும் என‌ உல‌மா க‌ட்சி தெரிவித்துள்ள‌து.

அக்க‌ட்சி மேலும் தெரிவித்த‌தாவ‌து,

நம‌து நாட்டு பெண்க‌ளின் ஆடை க‌லாசார‌ வ‌ர‌லாற்றை பார்க்கும் போது முஸ்லிம் பெண்க‌ள் அன்றிலிருந்து இன்று வ‌ரை த‌லை முத‌ல் கால் வ‌ரை முக‌ம் , கை த‌விர‌ மூடுப‌வ‌ர்க‌ளாக‌வே இருந்து வ‌ந்துள்ள‌ன‌ர்.

அந்நாட்க‌ளில் இல‌ங்கையின் சிங்க‌ள‌ பெண்க‌ளும், த‌மிழ் பெண்களும் கூட‌ சாரி அணிந்து உட‌லைக்காட்டாம‌ல்தான் ம‌ரியாதையாக‌ வாழ்ந்த‌ன‌ர்.

இத‌னை 1960க்கு முன்ன‌ர் வெளிவ‌ந்த‌ த‌மிழ், சிங்க‌ள சினிமா ப‌ட‌ங்க‌ளில் கூட‌ காண‌லாம்.

ஆனால் பின்ன‌ர் பெண்க‌ளின் ஆடை கொஞ்ச‌ம் கொஞ்ச‌மாக‌ மேலே உய‌ர்ந்தும், நெஞ்சுக்கு கீழே இற‌ங்கி வ‌ந்த‌தையும் காண்கிறோம். மினி ஸ்கேட், குட்டை பாவாடை, லெகின், என்று ம‌ட்டும‌ல்லாது மார்பின் முக்கால்வாசி ப‌குதியை காட்டும் அள‌வு பெண்க‌ளின் க‌லாசார‌ம் மாறிய‌தை காண்கிறோம்.

சாரி அணியும் பெண்க‌ளை கூட‌ காண‌ முடியாதுள்ள‌து.
சில‌ர் தாம் ப‌ணிபுரியும் நிலைய‌ங்க‌ளுக்காக‌ சாரி அணிகின்ற‌ன‌ரே த‌விர‌ ஏனைய நேர‌ங்க‌ளில் சாரிக‌ளை காண‌ முடிவ‌தில்லை. இந்த‌ மாற்ற‌ம்தான் விம‌ர்ச‌ன‌த்துக்குரிய‌தே த‌விர‌ முஸ்லிம் பெண்க‌ள் சாரியால் முழுக்க‌ ம‌றைத்த‌து போய் சாரி அல்லாத‌தால் முழு உட‌லையும் ம‌றைக்கும் மாற்ற‌ம் விம‌ர்ச‌ன‌த்துக்குரிய‌த‌ல்ல‌.

இவ்வாறு சிங்க‌ள‌, த‌மிழ் பெண்க‌ளின் ஆடை க‌லாசார‌மும் ஐரோப்பிய‌ ஆடைக‌ளுக்கு மாற்ற‌ம‌டைந்த‌ நிலையில் முஸ்லிம் பெண்க‌ள், சாரியை விட்டு வேறு ம‌ரியாதையான‌ உடைக‌ளுக்கு மாறிய‌தை ந‌ல்ல‌தொன்றாக‌ பார்க்க‌ வேண்டுமே த‌விர‌ ஆச்ச‌ர்ய‌மாக‌ பார்க்க‌ முடியாது.

எம்மை பொறுத்த‌ வ‌ரை முஸ்லிம் பெண்க‌ள் த‌ம‌து முக‌த்தை முழுவ‌தும் மூட‌த்தேவையுமில்லை, க‌ண்க‌ள் தெரிய‌ ஏனைய‌ முக‌ட்தை ம‌றைக்கும் மாஸ்க் அணிந்து ம‌றைக்க‌த்தேவையுமில்லை என்ற‌ க‌ருத்தை கொண்ட‌வ‌ர்க‌ள்.


ஆனாலும் கால‌த்துக்கேற்ப‌ நாட்டின் அனைத்து இன‌ பெண்க‌ளும் மாறி வ‌ருவ‌து போல் முஸ்லிம் பெண்க‌ளும் மாறியுள்ள‌ன‌ர் என்ப‌தே உண்மை. அந்த‌ மாற்ற‌ம் என்ப‌து அசிங்க‌மான‌த‌ல்ல‌.

ஏனைய‌ இன‌ பெண்க‌ள் பெரும்பாலும் ஐரோப்பிய‌ கிறிஸ்த‌வ‌ க‌லாசார‌த்துக்கு மாறிய‌ நிலையில் முஸ்லிம்க‌ள் இஸ்லாமிய‌ பெண்க‌ளின் க‌லாசார‌த்துக்கு மாறியதில் என்ன‌ த‌வ‌று உள்ள‌து.?

ஐரோப்பிய‌ க‌லாசார‌ உடை மிக‌ மோச‌மான‌து என‌ சில‌ பௌத்த‌ ம‌த‌குருமார் கூட‌ பேசுவ‌தை ஊட‌க‌ங்க‌ளில் காண்கிறோம். ஆனால் முஸ்லிம் பெண்களின் ஆடை பெண்க‌ளுக்கு பாதுகாப்பான‌து என்ப‌தை முழு உல‌கும் ஏற்றுக்கொண்டுள்ள‌து.

ஆக‌வே முக‌ம் மூடும் ச‌ட்ட‌த்தை அர‌சு கொண்டு வ‌ர‌ விரும்பினால் தாராள‌மாக‌ கொண்டு வ‌ர‌லாம். அத‌ற்கு நாம் எதிரான‌வ‌ர்க‌ள் அல்ல‌. தீவிர‌வாதிகள் முக‌த்தை மூடிக்கொண்டு தாக்கிய‌தாக‌ நாம் காண‌வுமில்லை.

ஆனாலும் முஸ்லிம்.அல்லாத‌ எவ‌ரும் முக‌த்தை மூடி ஏதாவ‌து தாக்குத‌லில் ஈடுப‌ட்டு விட்டு அதை முஸ்லிம் பெண்கள் மீது ப‌ழி போட‌லாம் என்ப‌தாலும், முக‌ம் மூடி திருட‌ர்க‌ளும், போலிக‌ளும் உருவாக‌லாம் என்ற‌ ஒரே கார‌ணுத்துக்காக‌வே முக‌ம் மூடும் ச‌ட்ட‌ம் கொண்டு வ‌ர‌ப்ப‌டுகிற‌து என‌ அர‌ச‌ த‌ர‌ப்பு சொல்வ‌தே சிற‌ந்த‌தாகும்.

  • முபாற‌க் அப்துல் ம‌ஜீத்
  • உல‌மா க‌ட்சி.
administrator

Related Articles