உடப்புஸ்ஸலாவை மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்த ஜீவன்!! குடிநீர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு!

உடப்புஸ்ஸலாவை மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்த ஜீவன்!! குடிநீர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு!

வலப்பனை பிரதேச சபைக்கு உட்பட்ட உடப்புஸ்ஸலாவை பிரதேசத்திற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச்செயலாளரும் இராஜங்க அமைச்சரான ஜீவன் தொண்டமான் இன்று விஜயம் செய்துள்ளார்.

இப்பிரதேசத்தில் பல   இடங்களுக்கு அவன்  மக்களின்  குறைகளை கேட்றிந்துள்ளார்.

அந்த வகையில் உடப்புஸ்ஸலாவை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மீப்பனை பிரதேசத்திற்கு சென்ற  இராஜங்க அமைச்சர் ஜீவன் அங்கு பௌத்த விகாரதிபதியினால் விகாரையில்  ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பில் கலந்துக்கொண்டார்.

இதன்போது இப்பிரதேச மக்கள் எனது கவனத்திற்கு கொண்டுவந்திருந்த குடி நீர் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் அது தொடர்பில் நீர்வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு துறை அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவுடன் தொடர்பு கொண்டதுடன், வெகு விரைவில் குடிநீர் பிரச்சினையை தீர்த்து வைப்பதாக உறுதியளித்துள்ளார்.

மேலும் இப்பிரதேச  மக்கள் மற்றும் இளைஞர்கள் எனது கவனத்திற்கு கொண்டுவரப்பட்ட வீதி,பாலம்,மற்றும் விளையாட்டு மைதானம் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கும் உடனடி தீர்வை பெற்று தருவதாகவும் தெரிவிததுள்ளார்.

இந்த நிகழ்வில் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ரமேஷ்வரன்,முன்னால் மாகாண சபை உறுப்பினர் எ.பிலிப்குமார், உள்ளிட்ட பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.

administrator

Related Articles