உருவாகிறது ‘மிருகம் 2’: பிப்ரவரியில் படப்பிடிப்பு தொடக்கம்

உருவாகிறது ‘மிருகம் 2’: பிப்ரவரியில் படப்பிடிப்பு தொடக்கம்

மிருகம்’ படத்தின் 2-ம் பாகம் உருவாகிறது. இதன் படப்பிடிப்பு அடுத்தாண்டு பிப்ரவரியில் தொடங்கவுள்ளது.

2007-ம் ஆண்டு சாமி இயக்கத்தில் வெளியான படம் ‘மிருகம்’. பெண்களுடன் தகாத உறவு, ரவுடித்தனம் என சுற்றித் திரியும் ஒருவன் எய்ட்ஸ் நோயில் சிக்கி எப்படி அவனது மாறுகிறது என்பது தான் இந்தப் படத்தின் கதை. ஆதி, பத்மப்ரியா, கஞ்சா கருப்பு, சோனா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இந்தப் படத்துக்கு வரவேற்பு கிடைத்தது. அதே வேளையில் சர்ச்சையும் உருவானது. தற்போது 13 ஆண்டுகள் கழித்து ‘மிருகம் 2’ உருவாகவுள்ளது. இதில் நாயகனாக ஆர்.கே.சுரேஷ் நடிக்கவுள்ளார்.

‘மிருகம் 2’ படத்தில் நடிக்கவிருப்பதை தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார் ஆர்.கே.சுரேஷ். ஆனால், இயக்குநர் யார் என்பதை அவர் வெளியிடவில்லை. தற்போது ஆர்.கே.சுரேஷ் உடன் நடிக்கவுள்ள நடிகர், நடிகைகள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் முடிவானவுடன் ‘மிருகம் 2’ படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது.

administrator

Related Articles