“எவோட்ஸ் 2021 பாடல் போட்டி”

“எவோட்ஸ் 2021 பாடல் போட்டி”

கலை, இலக்கிய ஆர்வலர்களை ஊக்குவிக்கும் வகையில் புதிய அலை கலை வட்டம் நடத்திவரும் எவோட்ஸ்-2021 கலை,கலாசாரப் போட்டி தொடரின் 3ஆவது போட்டியாக பாடல் எழுதும் போட்டி நடைபெறவுள்ளது.
இப்போட்டியில் கலந்து கொள்வதற்கான நிபந்தனைகள் வருமாறு


1)உங்களுக்கு விருப்பமான கருப்பொருளில் பாடலை எழுதலாம்.


2)ஒருவர் ஒருபாடல் பிரதியை மட்டுமே அனுப்பவேண்டும். இந்தப் பாடல் முன்னர் எத்தகைய ஊடகங்களிலும் வெளிவந்தவையாக இருக்கக்கூடாது.


3)ஒவ்வொரு பாடலும் 10வரிக்கு குறையாமலும் 16 வரிகளுக்கு மேம்படாமலும் இருத்தல் வேண்டும்.


4)ராகங்கள் குறித்த அனுபவம் உள்ளவர்கள் அவற்றை துணை கொண்டு பாடலை எழுதியிருப்பின் அவற்றை குறிப்பிட்டும் அனுப்பலாம்.


5)அனுப்படும் பாடல் பிரதியில் சொந்தபெயர், புனைப்பெயர், முகவரி, தொலைபேசி இலக்கங்கள், வங்கி கணக்கு இலக்கம் போன்ற விபரங்கள் தெளிவாக குறிப்பிடப்பட வேண்டும்;


6)பாடல் பிரதி எதிர்வரும் 22.03.2021க்குள் எமக்கு கிடைக்ககூடியதாக பதிவிடவேண்டும்


7)பதிவிடும் எமது வலைத்தளங்களின் விபரங்கள் வருமாறு; முகப்புத்தகம் வாயிலாக- https://www.facebook.computhiyaalaikalaivaddam1980@gmail.comஎன்ற பக்கத்தின் மூலமாகவும், puthiyaalai என்ற வட்சப் குறுப் மூலமாகவும் மற்றும் puthiyaalaikalaivaddam1980@gmail.com என்ற இமெயில் முகவரியூடாகவும் அனுப்பி வைக்கமுடியும்.


8)வயதெல்லை கிடையாது


9)நடுவர்களின் முடிவே இறுதியானது.
இந்த போட்டிகளுக்கான பரிசளிப்பு 28.03.2021 இல் நடைபெறும்.
பரிசுகளுக்காக மூன்று ஆக்கங்கள் மட்டுமே தெரிவு செய்யப்படும் அவற்றுக்கான பரிசுகளின் விபரம் வருமாறு
முதல்பரிசு :- 5000 ரூபா பணப்பரிசும் சான்றிதழும்.
இரண்;டாம் பரிசு :- 3000 ரூபா பணப்பரிசும் சான்றிதழும்
மூன்றாம் பரிசு :- 2000 ரூபா பணப்பரிசும் சான்றிதழும்

10)மேலதிக விபரங்களுக்கு:- 0722780276, 0766249108 0776274099, 0777412604, என்ற அலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளவும்

administrator

Related Articles