எஸ்ஏசிக்கு பதிலடி.. தளபதி விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் மாற்றம்.. விஜய் அதிரடி

எஸ்ஏசிக்கு பதிலடி.. தளபதி விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் மாற்றம்.. விஜய் அதிரடி

தளபதி விஜய் மக்கள் இயக்கத்திற்கு புதிய மாவட்ட தலைவர்களை நியமித்து நடிகர் விஜய் அறிவித்துள்ளார். நடிகர் விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் அண்மையில் புதிய கட்சியை பதிவு செய்த நிலையில், நடிகர் விஜய் தனது இயக்க நிர்வாகிகளை மாற்றியமைத்துள்ளார். அதன்படி, ‘தளபதி விஜய் மக்கள் இயக்கத்திற்கு’ மாவட்ட வாரியாக, தலைவர்கள், இளைஞரணி தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல், கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களிலும் நிர்வாகிகளை நியமித்துள்ளார் விஜய். மேலும், தனது புகைப்படம், இயக்கத்தின் பெயர் மற்றும் கொடி ஆகியவற்றை மாநில, மாவட்ட நிர்வாகிகளிடம் அனுமதி பெற்றே பயன்படுத்த வேண்டும் என்றும், மீறுவோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

administrator

Related Articles