ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைவாரா அலி ஸாஹிர் மௌலானா!

ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைவாரா அலி ஸாஹிர் மௌலானா!

இலங்கையின் சிரேஷ்ட அரசியல்வாதியும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான செய்யித் அலி ஸாஹிர் மௌலானாவை ஐக்கிய மக்கள் சக்திக்குள் இணைக்கும் ரகசிய பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாக அறிய முடிகிறது.

முன்னர் ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராகவும் கட்சியின் மட்டகளப்பு மாவட்ட செயற்பாட்டிற்கு பொறுப்பாகவும் இருந்த இவர் கடந்த கால அரசியல் சூழ்நிலை காரணமாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்தார்.

ஆனாலும் இவரை புத்தி ஜீவிகள் மீண்டும் இணைத்து கொள்ள சஜித் தரப்பு முடிவு செய்துள்ளது.இதற்கமைய கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களான கொண்ட குழுவொன்றை ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ நியமித்துள்ளார்

இந்த குழுவின் சில உறுப்பினர்கள் முன்னாள் பாரளுமன்ற உறுப்பினரான அலி ஸாஹிர் மௌலானாவை சந்தித்து விரிவான பேச்சுவார்த்தை நடத்தி அழைப்பு விடுத்துள்ளனர்.

இது குறித்து நாம் முன்னாள் இராஜாங்க அமைச்சராக அலி ஹாஹிர் மௌலானாவுடன் தொடர்ப கொண்டு கேட்டோம்.

” ஜனநாயக ரீதியாக செயற்படும் சஜித் பிரேமதாஸ கொரோனா காரணமாக மரணிக்குமு முஸ்லிம்களின் ஜனஸாக்கள் புதைக்கப்பட்ட வேண்டும் என்று குரல் கொடுத்த சஜித் அவர்களோடு ஜனநாயக ரீதியான செயற்பாடுகளில் ஒன்றிணைய நான் தயாராக இருக்கிறேன்.” என அவர் சொன்னார்.

ஆனால் கட்சியில் சேர்வீர்களா என கேட்டதற்கு புன்னகையோடு தொலைபேசியை கட் செய்தார் .

administrator

Related Articles