ஐந்து வருடம் அகதி வாழ்க்கை..!எப்படி செல்வந்தனாக மாறினீர்கள் ரிசாத்திடம் கேள்வி?

ஐந்து வருடம் அகதி வாழ்க்கை..!எப்படி செல்வந்தனாக மாறினீர்கள் ரிசாத்திடம் கேள்வி?

இலங்கையில் தீவிரவாதத்தை பரப்புவதற்கு பலம்பொருந்திய நாடுகள் சில மேற்கொணட சதிமுயற்சியே ஏப்பிரல் 21 தாக்குதல் என முன்னாள அமைச்சர் ரிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்
உயிர்த்தஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

துருக்கியில் தடைசெய்யப்பட்ட எவ்ஈடிஓ என்ற அமைப்பு இலங்கையில் தடை செய்யப்பட்டமை குறித்த விசாரணைகளில் தலையிட்டீர்களா என்ற கேள்விக்குடி பதிலளித்துள்ள ரிசாத் பதியுதீன் அந்த குற்றச்சாட்டு உண்மையில்லை தனக்கு அந்த அமைப்பை சேர்ந்தவர்களுடன் எந்த தொடர்பும் இல்லை என தெரிவித்துள்ளதுடன் விசாரணைகளில் தான் தலையிடவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.


கனடாவில் உள்ள ரிசாத் பதியுதீனின் சகோதரியின் வீட்டினை தற்கொலை குண்டுதாரிகள் பயன்படுத்தியமை குறித்து அறிந்திருக்கின்றீர்களா

என்ற கேள்விக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தான் அதனை அறிந்திருக்கவில்லை எனவும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னரே அதனை அறிந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பிட்ட வீட்டிற்கு தான் விஜயம் மேற்கொள்ளவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

உங்கள் தம்பி எப்போதாவது கைதுசெய்யப்பட்டாரா என்ற கேள்விக்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணையின் போது அவர் கைதுசெய்யப்பட்டார்,சினமன் கிரான்டில் தாக்குதலை மேற்கொண்டவர் எனது சகோதரரிற்கு ஏழு தொலைபேசி அழைப்புகளை விடுத்துள்ளார் என்பதை ஊடகங்கள் மூலம அறிந்தேன் என ரிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.


இதன் பின்னர் நான் எனது சகோதரரிடம் இன்சாவினை ஏன் அவர் தொடர்புகொண்டார் என கேட்டதற்கு அரசாங்கம் செப்பு ஏற்றுமதியை இரத்துசெய்தமையால் அவருக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்தே பேச்சுக்களை மேற்கொண்டதாக எனது சகோதாரர் தெரிவித்தார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
நீங்கள் மறைமுகமாக இன்சாவ் சகோதரர்களிற்கு ஆதரவளித்துள்ளீர்களா என்ற கேள்விக்கு ரிசாத் பதியுதீன் நான் இந்த குற்றச்சாட்டை முழுமையாக நிராகரிக்கின்றேன்,

இன்சாவ் சகோதரர்களிற்கு நான் உதவவேயில்லை என தெரிவித்துள்ளார்.
விடுதலைப்புலிகள் வடக்கிலிருந்து வெளியேற்றிய பின்னர் ஐந்து வருடங்கள் முகாமில் அகதியாக வாழ்ந்ததாக தெரிவிக்கின்றீர்கள்-நீங்கள் எப்படி அரசியலிற்கு வந்தீர்கள் செல்வந்தராக மாறினீர்கள் என ஆணைக்குழுவின் நீதிபதியொருவர் ரிசாத்பதியுதீனிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.


இதற்கு பதிலளித்துள்ள ரிசாத் பதியுதீன் நான் அகதியாகிவிட்டதால் பிச்சை எடுக்கவேண்டிய அவசியமிருக்கவில்லை,என்னால் வர்த்தகத்தில் ஈடுபட முடியும் என குறிப்பிட்டுள்ளார்.


நீங்கள் உங்கள் அமைச்சு பதவிகளை பயன்படுத்தி இவ்வளவு சொத்தினை சேர்த்தீர்களா? உங்கள் குடும்பத்தினையும் வர்த்தகத்தினையும் முன்னேற்றினீர்களா என்ற கேள்விக்கு ரிசாத்பதியுதீன் நான் எந்த வர்த்தகத்தினை முன்னேற்றுவதற்கு எனது அமைச்சு பதவியை பயன்படுத்தவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

administrator

Related Articles