ஐ.நா தீர்மானம் தொடர்பில் சம்பந்தன் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

ஐ.நா தீர்மானம் தொடர்பில் சம்பந்தன் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை எதிரான பிரேரணை நிறைவேற்றப்பட்டதை வரவேற்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்தியா இலங்கை குறித்து அழமாக சிந்தித்து மனித உரிமைகள் பேரவையில் செயயற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, 47 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் 22 நாடுகள் மாத்திரமே பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்ததாகவும், 11 நாடுகள் எதிராக வாக்களித்துள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

14 நாடுகள் வாக்களிப்பில் கலந்துகொள்ளாத நிலையில், 25 நாடுகள் இந்த பிரேரணை தொடர்பிலான எதிர் நிலைப்பாட்டில் இருந்தமையை வெளிப்படையாக காண முடிந்தாகவும் அவர் நேற்று (23) இடம்பெற்ற ஊடகச் சந்திப்பில் கூறியிருந்தார்.

இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் ஒன்றிணைந்த குழு சமர்ப்பித்த 46ஃ1 தீர்மானம் மேலதிக வாக்குகளால் நேற்று (23) நிறைவேற்றப்பட்டது.

இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 22 நாடுகளும் எதிராக 11 நாடுகளும் வாக்களித்தன.

14 நாடுகள் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை.

தீர்மானத்திற்கு ஆதரவாக ஆர்ஜன்டீனா, ஆர்மேனியா, அவுஸ்திரியா, பஹமாஸ், பிரேசில், பல்கேரியா, ஐவரிகோஸ்ட், செக் குடியரசு, டென்மார்க், பிஜி தீவுகள், பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, மலாவி, மார்ஷல் தீவுகள், மெக்சிக்கோ, நெதர்லாந்து, போலந்து, கொரியா, உக்ரைன், பிரித்தானியா மற்றும் உருகுவே ஆகிய நாடுகள் வாக்களித்தன.

எதிராக பங்களாதேஸ், பொலிவியா, சீனா, கியூபா, எரித்திரியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், ரஷ்யா, சோமாலியா, உஸ்பெகிஸ்தான் மற்றும் வெனிசுவேலா ஆகிய நாடுகள் வாக்களித்துள்ளன.

இந்தியா, பஹ்ரைன், புர்கினாஃபசோ, கெமரூன், கெபோன், இந்தோனேசியா, ஜப்பான், லிபியா, மொரிட்டானா, நமீபியா, நேபாளம், செனகல், சூடான், டோகோ ஆகிய நாடுகள் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை.

administrator

Related Articles