ஐ.பி.எல் கப்பை வெல்ல சென்னை அணி புது வியூகம்

ஐ.பி.எல் கப்பை வெல்ல சென்னை அணி புது வியூகம்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எதிர்வரும் 9 ஆம் திகதி ஆரம்பமாகும் ஐ.பி.எல் தொடரின் 14 ஆவது தொடரில் புதிய சீருடையுடன் களம் இறங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2008 ஆம் ஆண்டில் இருந்து சென்னை அணி ஒரே மாதிரியான சீருடையுடன் வலம் வந்த நிலையில் இந்த முறை சீருடை முதன் முறையாக மாற்றபட்;பட்டுள்ளது.

அதாவது இந்திய இராணுவத்தை கௌரவிக்கும் வகையில் இராணுவ சீருடைக்குரிய நிறம், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சீருடையின் தோள்பட்டை பகுதியில் இடம் பெற்றுள்ளது.

இது குறித்து சென்னை அணியின் தலைமை செயற்பாட்டு அதிகாரி காசி விஸ்வநாதன் கூறுகையில்…

“இராணுவத்தின் முக்கியத்துவத்தையும், அவர்களின் தன்னலமற்ற சேவையை பாராட்டும் விதமாகவும், அது குறித்த விழிப்புணர்வை அதிகப்படுத்தும் நோக்கிலும் எங்கள் அணியின் சீருடையில் இராணுவ சீருடை வண்ணத்தை இணைத்துள்ளோம். இராணுவ வீரர்கள் தான் நாட்டின் உண்மையான ஹீரோக்கள்” என்றார்.

administrator

Related Articles