ஐ.பி.எல் 2020.. செம்பியன் யார் ?

ஐ.பி.எல் 2020.. செம்பியன் யார் ?

ஐ.பி.எல்  2020 எதிர்வரும் 19 ஆம் திகதி ஐக்கிய அரபு ராஜ்யத்தில் ஆரம்பமாக இருக்கிறது. உலகம் முழுவதும் இதனை கண்டு களிக்க  கோடான கோடி ரசிகர்கள் தயாராகி கொண்டிருப்பார்கள்

மொத்தமாக இம்முறை  எட்டு அணிகள் களமிறங்குகின்றன.இதில் சர்வதேச வீர்கள் முதற்கொண்டு சாதராண வீரர்கள் வரை நம்மை  மகிழ்விக்க போகிறார்கள்.

உலகம் முழுவதும் தொலைக்காட்சி முதற்கொண்டு சகல சமூக வலைத்தளங்களிலும் IPL 2020 வைரலாகி ரசிக ஜனங்களை  வலைத்து பிடித்திருக்கிறது .

இம்முறை மோதும் அணிகளை பற்றி பார்ப்போமா?

சென்னை சூப்பர் கிங்ஸ்

இது தமிழ்நாட்டு ரசிகர்களின் ஆதரவோடு களக்கபோகும் அணி.
இதற்கு சென்னை தல எம். எஸ் தோனி தலைமை தாங்குறாரு அந்த அணியில்
அம்பாத் ராயூடு , டெவோன் பார்வோ, டூ பிலேஷ், லுங்கி நகடி , மிச்சேல் சேன்டனர், முரளி விஜய் ,இம்ரான் தாஹீர், ரவீந்திர ஜடேஜா, ஷேன் வோர்ட்சன் , சேம் கரண், ஜோஷ் ஹேசல்வூட்  உடப்பட இன்னும் பலர் விளையாடுறாங்க .

ஐ.பி எல் சரித்திரத்தில தனக்கு என தனி இடம் பிடித்த சென்னை அணி இம்முறையும் வெற்றி பெறுமா … இல்ல ஊத்தி கொள்ளுமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

அடுத்தாக  இந்திய தலைநகரான டெல்லியை சேர்ந்த டெல்லி கெபிட்டடல்ஸ் அணி இதற்கு ஸ்ரீயாஸ் ஐயர் தலைமை . அணிக்கு பயிற்சியாளர் ரிக்கி பொன்டிங்  இந்த அணியில் ரபாடா, இசாந் சர்மா, கீமோ போல் , ரவிசந்திரன் அஸ்வின்,  உட்பட பெரிய பட்டாளமே விளையாட ரெடியாக இருக்கிறாங்க .

இம்முறை கப்பை இவங்க தான் எடுப்பாங்கன்னு இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்ஸன் அள்ளி விட்டு இருக்காரு

அடுத்த அணி கிங்ஸ் பஞ்சாப் அணி படு வில்லத்தனமான அணி இது இதற்கு தலைமை கே.எல் ராகுல்
அணியின் கோஷ் கோபக்காரரன அனில் கும்பளே.

இந்த அணியியில் தான் அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல் விளையாடுறாரு .அதனால சிக்ஸருக்கு பஞ்சம் இருக்காது . அவரோட முஜிப் ரஹ்மான் , முருகன் அஸ்வின், நிக்லஸ் பூரன்,கிலன் மெக்ஸவல் , ஜிம்மி நேசன், கிறிஸ் ஜோர்டான் என்ற அதிரடி வீர்களோடு ஒரு அலையே ரெடியாகி இருக்கு..

இப்பவே கண்ணை கட்டுது.. இனி அடுத்தாக பார்க்க போற அணி
கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் .. அப்படியே கொஞ்சம் அமைதியாக இருங்க இந்த அணிக்கு தலைவர் தினேஷ் கார்த்திக் , கோச் வேற யாரு நம்ம பிரண்டன் மெக்மிலம் தான் அவரை பற்றி தெரிஞ்சவங்களுக்கு தெரியும்.

இந்த அணியில அன்றே ரசல் , சுனில் நாரயேன், ஹியோயின் மோர்கன், பெட் கமின்ஸ் உட்பட கபாலி படையே இருக்கு .

அடுத்தது நீங்க ஆவலோடு எதிர்பார்த்த மும்பாய் இன்டியன்ஸ்
இதற்கு தலைமை ரோகித் சர்மா அவருக்கு தூணாக இருக்க போற கோஷ் இலங்கை முன்னாள் கிரிக்கெட் லெஜன்ட் மஹேல ஜயவர்தன  இந்த அணி ரொக்கெட் வேகத்தில பந்து வீசும் ஜஸ்பீட் பூமரா, ஹர்திக் பாண்டியா,கிரோன் போர்லார்ட், ரதபோர்ட், ஜேம்ஸ் பட்டின்ஸன் என பல வீரர்கள் இருந்தாலும் இவர்களது ஆஸ்தான யோக்கர் போலர் லசித் மாலிங்க இல்லாதது கொஞ்சம் கவலைதான்.

ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி அவுஸ்திரேலிய சிங்கம் நம்ம தங்கம் ஸ்டீபன் ஸ்மித் தலைமை தாங்குறாரு.
அணியிட கோச் அன்டீவ் மெக்டொன்ல்ட்
இம்முறை  பென் ஸ்டோர்க்ஸ் , ஜோஷ் பட்லர், டேவிட் மிலர் உட்பட பல வீரர்கள் மோத ரெடியாக இருக்காங்க

இனி நம்ம விராத் கோலி தலைமை தாங்கும் ரோயல் செலஞ் பெங்களுர் அணி பற்றி பார்ப்போம்
அணியின் பயிற்றுவிப்பாளராக சைமைன் கெத்திச் இருக்காரு.
வீரர்களாக இம்முறை ஐ.பி  எல்லில் விளையாடுற ஒரே வீரர் இசுரு உதான , ஏ.பி டிவிலியர்ஸ், மொஹின் அலி,
ஆரோன் பிஞ்ச்,டேல் ஸ்டைன் , அடம் ஷம்பா என்ற அண்ணாத்தே படையே இருக்கு

இவங்களுக்கு சளைச்சவங்க நாங்க இல்ல என்னும் சொல்ற அணித்தான் சன்ரைஸ் ஹய்தரபாத் இந்த அணி டேவிட் வார்னர் தலைமையிலும் கோச் டிரவர் பெய்லேஸ் தலைமை
யில் ஆட ரெடியாகி இருக்கு
இதில் கெய்ன் வில்லியம்ஸ் , ஜோனி பெயர்ஸோடவ், ரசித் கான், மொகமட் நபிப் என பல வீரர்கள் இருக்காங்க.

இம்முறை கப்பை மும்பாய் இன்டியன்ஸா , சென்னை சூப்பர் கிங்ஸா அல்லது வேறு அணியா சுவிகரிக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

முக்கியமான விஷயம் இம்முறை செம்பியன் அணிக்கு பரிசு தொகையில 50 % குறைக்க போட்டி ஏற்பாட்டாளர்கள் தீர்மானித்து இருக்காங்க.

ஆனால் அதனை அணிகளின் சொந்தக்காரங்க ஏற்று கொள்ள இல்லையாம்  . இப்போதைய தகவல் பிரகாரம் முதல் பரிசு 10 கோடி , இரண்டாம் அணிக்கு 6.25 கோடியாம் .
கொவிட் காலத்தில் இந்த போட்டி தொடர் எங்களை மகிழ்விக்க வேண்டும்
என்பதே எமது ஆவல்.

administrator

Related Articles