ஒக்டோபர் முதலாம் திகதி முதல் விளையாட்டு அரங்குகளை திறக்க நடவடிக்கை எடுங்கள்!!!

ஒக்டோபர் முதலாம் திகதி முதல் விளையாட்டு அரங்குகளை திறக்க நடவடிக்கை எடுங்கள்!!!

ஒக்டோபர் முதலாம் திகதியில் இருந்நு பார்வையாளர்கள் கண்டுகளிக்க விளையாட்டரங்குகளை திறக்குமாறு இங்கிலாந்தின் பிரிமயர் லீக் கழகங்கள் அரசாங்கத்திடம் வேண்டு கோள் விடுத்துள்ளன.

கொவிட் காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட வகையில்  ஆரம்ப போட்டிகளுக்கு ஆயிரம் பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது.

ஆயினும் விளையாட்டு ரசிகர்களின் வருகை இதைவிட அதிகமாக இருப்பதால்  மேலும் ரசிகர்களை அனுமதிக்க வேண்டும் என கழகங்கள் கோரியுள்ளன.

உள்ளே வரும் ரசிகர்களை சமமான கட்டுப்பாட்டுடன் பாதுகாக்க முடியும் எனவும் அந்த கழகங்கள் தெரிவித்துள்ளன. இது தொடர்பான விசேட பேச்சுவார்த்தை இன்று லண்டனில் இடம்பெற்றுள்ளது.

பிரிமியர் லீக் கழகங்களுக்கும் ஏற்பாட்டாளர்களுக்கும் இடையில் இடம்பெற்ற இந்த கூட்டத்தில் ரசிகர்களின் அதியுயர் பாதுகாப்பு குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டது.

இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் பரவியதை அடுத்து தற்போது அனைத்து போட்டிகளும் மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் நடத்தப்பட்டு வருகிறது.

ரசிகர்களின் வருகை பாதிக்கப்பட்டால் 2020 -21 ஆண்டுக்கான விளையாட்டு அரங்கின் கட்டணம் மற்றும் செலவுகள் சுமார் 700 மில்லியன் ஸ்ரெலிங் பவுண்டுகளாக இருக்கும் என ஏற்பாட்டாளர்கள் எதிர்வு கூறுகின்றனர்.

இதேவேளை அமெரிக்காவில் இன்று நடைப்பெற்ற புட்போல் (NFL) போட்டியை கண்டுகளிக்க 6 ஆயிரம் பேருக்கு அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது.

administrator

Related Articles