ஒசாமாவின் மகனின் மனைவி அல்ஹைதாவில் மிக முக்கிய உறுப்பினராக மாறுவார்! புலனாய்வு அமைப்புகள்

ஒசாமாவின் மகனின் மனைவி அல்ஹைதாவில் மிக முக்கிய உறுப்பினராக மாறுவார்!  புலனாய்வு அமைப்புகள்

அமெரிக்க புலனாய்வு அமைப்புகள் இணைந்து அல்ஹைதாவின் மிக முக்கிய உறுப்பினர் ஒருவரைஈரானில் கொலை செய்துள்ளன.
டிரம்ப் நிர்வாகம் ஈரானிற்கு எதிராக மிக அழுத்தங்களை ஐநாவில் அதிகரித்துக்கொண்டிருந்த தருணத்தில் இந்த துணிச்சலான நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.


அமெரிக்க நிர்வாகத்தை சேர்ந்த நான்கு முன்னாள் தற்போதைய அதிகாரிகள் ஆகஸ்ட் மாதத்தில் ஈரான் தலைநகரில் அல்மஸ்ரி கொல்லப்பட்டார் என தெரிவித்துள்ளன.

அல்மஸ்ரியை எங்கு இலக்குவைக்கலாம் அவர் எங்கு நடமாடுகின்றார் என்ற தகவலை அமெரிக்கா இஸ்ரேலிய புலனாய்வு பிரிவினருக்கு வழங்கியுள்ளது.அதனை பயன்படுத்தி இஸ்ரேலிய புலனாய்வு பிரிவினர் அவரை கொலை செய்துள்ளனர்.
வேறு இரு அதிகாரிகள் இதனை உறுதி செய்துள்ளதுடன் மேலதிக தகவல்களை வழங்க மறுத்துள்ளனர்.


1988ம் ஆண்டு நைரோபி கென்யா -தான்சானியா போன்ற நாடுகளில் குண்டு வெடிப்பு இடம்பெற்ற அதேநாளில் அதாவது ஆகஸட் ஏழாம் திகதி அல்மஸ்ரி டெஹ்ரானில் கொல்லப்பட்டுள்ளார்.
அந்த தாக்குதல்களை இவரே திட்டமிட்டார் என அமெரிக்க புலனாய்வு அமைப்புகள் கருதுகின்றன.


செப்டம்பர் 11 தாக்குதல்களை அமெரிக்காவில் முன்னெடுத்த அல்ஹைதா அமைப்பிற்கு இது பாரிய பின்னடைவாகும்.
அந்த அமைப்பின் தலைவர் அய்மன் அல்ஜவஹிரி குறித்து உறுதி செய்யமுடியாத தகவல்கள் வெளியாகிவரும் தருணத்தில் அல் மஸ்ரி கொலை செய்யப்பட்டமை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

அய்மன் ஜவஹிரி குறித்த தகவல்களை அமெரிக்க புலனாய்வு அமைப்புகள் உறுதி செய்யவில்லை அதனை உறுதி செய்ய முயல்வதாக தெரிவிக்கின்றன.
அல்மஸ்ரியை ஈரானில் கொலை செய்தது இஸ்ரேலின் கிடொன் என்ற புலனாய்வு அமைப்பு என இந்த கொலைநடவடிக்கையுடன் நேரடி தொடர்பில் உள்ள புலனாய்வு பிரிவை சேர்ந்த நபர் ஒருவரும்,சிஐஏயின் அதிகாரியொருவரும் தெரிவித்தனர்.


இஸ்ரேலின் புலனாய்வு அமைப்பான மொசாட்டின் இரகசிய பிரிவொன்றே- கிடொன். உயர்மட்ட கொலைகளுக்காக உருவாக்கப்பட்டதே இந்த அமைப்பு. கிடொன் என்பதற்கு ஈட்டியின் முனை என்பது அர்த்தம்.

அல்மஸ்ரியின் மகளும் ஹம்சா பின் லேடனின் மனைவியுமான மரியமும் இந்த நடவடிக்கையில் இலக்கு வைக்கப்பட்டார் என புலனாய்வு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அல்ஹைதாவின் தலைமையை ஏற்ககூடியவராக மாற்றப்பட்டுகொண்டிருந்த – உருவாக்கப்பட்டுக்கொண்டிருந்தவர் மரியம் என அமெரிக்க புலனாய்வு அமைப்புகள் கருதுகின்றன.
அவர் அல்ஹைதாவின் நடவடிக்கைகளை திட்டமிடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தார் என புலனாய்வு அமைப்புகள் கருதுகின்றன.

ஆகஸ்ட் ஏழாம் திகதி டெஹ்ரானின் வடபகுதியில் உள்ள நடுத்தரவர்க்க குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர்கள் துப்பாக்கி பிரயோக சத்தத்தினை கேட்டு என்ன நடந்தது என பார்ப்பதற்காக வெளியே ஓடிச்சென்றனர்.

அங்கு வெள்ளை ரெனோல்ட் வாகனத்தில் நபர் ஒருவரும் இளம் பெண்ணொருவரும் உயிரிழந்த நிலையில் காணப்பட்டனர்.
அவர்களின் வாகனத்தை கடந்து மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் அவர்கள் மீது ஆகக்குறைந்தது நான்கு தடவைகள் துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றிருக்கவேண்டும்.
துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளது என எங்களிற்கு தெரிவித்தார்கள் நாங்கள் அங்கு சென்றவேளை இருவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டனர் என உள்ளுர் பத்திரிகையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் இடம்பெற்ற சிலநிமிடங்களில் ஈரானிய ஊடகங்கள் ஹெல்புல்லா அமைப்புடன் தொடர்புகளை பேணிய லெபனான் பேராசிரியரும் அவரது மகளும் கொல்லப்பட்டுள்ளனர் என செய்திகள் தெரிவித்துள்ளன.
அந்த கொலைக்கான காரணங்கள் எதுவும் வெளியாகவில்லை எவரும் கைதுசெய்யப்படவில்லை

இதன் பின்னர் அந்த சம்பவம் குறித்து எவரும் அக்கறை கொள்ளவில்லை
ஆனால் ஒக்டோபர் மாதத்தில் இனந்தெரியாத சில சமூக ஊடக பயனார்கள் கொல்லப்பட்டவர் லெபனான் பேராசிரியரில்லை மாறாக அவர் அல்ஹைதாவின் முக்கிய நபர் என தெரிவித்ததை தொடர்ந்து மீண்டும் கவனம் அந்த சம்பவத்தை நோக்கி திரும்பியது.
ஒக்டோபரில் ஐக்கிய அரபு இராச்சியத்தை சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவரின் டுவிட்டர் ஈரானில் கொல்லப்பட்டது அலமஸ்ரியும் அவரது மகளும் என தெரிவித்தத

நான் ஆப்கான் யுத்தததில் முன்னர் ஈடுபட்டவர்களிடம் விசாரித்ததில் அவர்கள் அது அல்மஸ்ரியும் அவரது 27 வயது மகளும் என தெரிவித்தனர் என அந்த பத்திரிகையாளர் டுவிட்டரில் பதிவு செய்திருந்தார

்இதற்கு இரண்டு வாரங்களுக்கு பின்னர் சம்சாட் நியுஸ் அல்மஸ்ரி ஈரானில் கொல்லப்பட்டுள்ளார் என தெரிவித்தது.
ஆனால் ஈரானிய அதிகாரிகள் தொடர்ந்தும் இறுக்கமான மௌனத்தை கடைப்பிடித்தனர்.
பயங்கரவாத தடுப்புபிரிவை சேர்ந்த அதிகாரியொருவர் அல்மஸ்ரி கொல்லப்பட்டிருக்கலாம் என தெரிவித்துள்ளார்.
அல்மஸ்ரியும் அவரது மகளும் இஸ்ரேலிய புலனாய்வு பிரிவினரால் கொல்லப்பட்டுள்ளனர் நியுயோர்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

Rajeevan Arasaratnam தினக்குரல்

administrator

Related Articles