ஒன்றாரியோவில் ஒரே நாளில் 1299 கொவிட் தொற்றாளிகள் பதிவு

ஒன்றாரியோவில் ஒரே நாளில் 1299 கொவிட் தொற்றாளிகள் பதிவு

ஒன்றாரியோவில் ஒரே நாளில் 1299 கொவிட் தொற்றாளிகள் பதிவாகியுள்ளதாக கனேடிய சுகாதாரத் திணைக்களம் அறிவித்துள்ளது.

கடந்த சில வாரங்களில் கொவிட் தொற்றாளிகள் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்து வரும் நிலையில் இன்று மீளவும் இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

சனிக்கிழமை 990 பேர் கொவிட் தொற்றுக்கு இலக்காகியிருந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை 1299 பேருக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது.

கடந்த பெப்ரவரி மாதம் 13ம் திகதி ஒன்றாரியோவில் மொத்த கொவிட் தொற்றாளிகளின் எண்ணிக்கை 1300 ஆக காணப்பட்டது.

கடந்த இருபத்துநான்கு மணித்தியாலங்களில் ஒன்றாரியோவில் 15 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

administrator

Related Articles