ஒன்றாரியோவில் கொவிட் மூன்றாம் அலை?

ஒன்றாரியோவில் கொவிட் மூன்றாம் அலை?


ஒன்றாரியோவில் கொவிட் மூன்றாம் அலை ஏற்பட்டுள்ளதாக மாகாண வைத்தியசாலை ஒன்றியம் தெரிவித்துள்ளது.

ஒன்றாரியோ வைத்தியசாலை ஒன்றியத்தின் டுவிட்டர் பதிவு ஒன்றில் இந்த விடயம் தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாகாணத்தில் கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக உயர்வடைந்துள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மாகாணத்தில் கொவிட் மூன்றாம் அலை ஏற்பட்டுள்ளதாகவும் கடுயைமான சுகாதார வழிமுறைகள் பின்பற்றப்பட வேண்டியது அவசியமானது எனவும் அவ்வாறு செய்யத் தவறினால் வைத்தியசாலைகளில் நோயாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் சிரமங்கள் ஏற்படும் எனவும் ஒன்றாரியோ மாகாண வைத்தியசாலை ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது.

நேற்றைய தினம் மட்டும் மாகாணத்தில் 1268 பேருக்கு கொவிட் தொற்று உறுதியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

administrator

Related Articles