ஒன்றாரியோவில் சில கொவிட் கட்டுப்பாடுகளில் தளர்வு

ஒன்றாரியோவில் சில கொவிட் கட்டுப்பாடுகளில் தளர்வு

ஒன்றாரியோ மாகாணத்தில் சில கொவிட் கட்டுப்பாடுகளில் தளர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக றொரன்டோ மற்றும் பீல் பிராந்தியங்களில் ரெஸ்டுரன்ட்கள் மற்றும் பார்களில் இவ்வாறு கொவிட் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ளது.

மாகாணத்தின் பொருளாதார மீட்சியை கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மாகாண முதல்வர் டக் போர்ட் தெரிவித்துள்ளார்.

பீல் மற்றும் றொரன்டோ ஆகிய பிராந்தியங்களில் கொவிட் சுகாதார விதிகள் கடுமையான முறையில் அமுல்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கொவிட் பரவுகையை கட்டுப்படுத்தும் நோக்கில் இவ்வாறு கடுமையான கெடுபிடிகள் அமுல்படுத்தப்பட்ட போதிலும் பொருளாதாரத்தை கருத்திற் கொண்டு சில தளர்வுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

administrator

Related Articles