ஒன்றாரியோ மாகணத்தில் இரு தினங்களில் 95 பேர் மரணம்! 3.363 புதிய நோயாளிகள்!!

ஒன்றாரியோ மாகணத்தில் இரு தினங்களில் 95 பேர் மரணம்! 3.363 புதிய நோயாளிகள்!!

கொரோனா காரணமாக ஒன்றாரியோ மாகணத்தில் கடந்த இரண்டு தினங்களில் அதாவது ஜனவரி 1 ஆம் 2 ஆம் திகதிகளில் 95 பேர் உயிரழந்துள்ளனர். அத்துடன் 3.363 பேருக்கு வைரஸ் அடையாளம் காணப்பட்டுள்ளது.

கொரோனா நோய் பரவிய நாட்களில் இதுவே ஆக கூடுதலான தொகை என சுகாதார அதிகாரிகள் கூறுகிறார்கள்.

ஆயினும் ஜனவரி 1 ஆம் திகதி அரச விடுமுறை என்ற காரணத்தினால் எந்த வித தகவல்களையும் அரசாங்கம் வெளியிடவில்லை.

இதன்படி பீல் வலயத்தில் 713 பேரும் , டொரோன்டோ வலயத்தில் 700 பேரும் யோர்க் வலயத்தில் 395 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

administrator

Related Articles