ஒன்றாரியோ வரவு செலவுத் திட்ட துண்டுவிழும் தொகை 33.1 பில்லியன்

ஒன்றாரியோ வரவு செலவுத் திட்ட துண்டுவிழும் தொகை 33.1 பில்லியன்


ஒன்றாரியோ வரவு செலவுத் திட்டத்தின் துண்டுவிழும் தொகை 33.1 பில்லியன் டொலர்களாகும்.

மாகாண முதல்வர் டக் போர்ட் தலைமையிலான அரசாங்கம் நேற்றைய தினம் 2021-2022ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தினை சமர்ப்பித்திருந்தது.

கொவிட்-19 நோய்த் தொற்று பரவுகை பொருளாதார நெருக்கடிகள் போன்ற காரணிகளுக்கு மத்தியில் வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த வரவு செலவுத் திட்டத்தில் கூடுதலாக மருத்துவமனைகள், தடுப்பூசிகள் என்பன தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வரவு செலவுத் திட்ட துண்டுவிழும் தொகை 38.1 பில்லியனாக காணப்படும் என முன்னதாக எதிர்வு கூறப்பட்ட போதிலும் உண்மையில் அந்த தொகை 33.1 பில்லியன் டொலர்களாக வரையறுக்கப்பட்டுள்ளது.

கண்ணுக்கு தெரியாத எதிரியுடன் போராட வேண்டியுள்ளதாகவும் ஒன்றாரியோ வாழ் மக்களின் சுகாதாரத்தை பாதுகாப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் நிதி அமைச்சர் பீட்டர் பெதலென்பெவ்லி தெரிவித்துள்ளார்.

administrator

Related Articles