ஒரு கோடி ரூபா செலவில் சிறுவர் பராமரிப்பு நிலையம் திறப்பு விழா!

ஒரு கோடி ரூபா செலவில் சிறுவர் பராமரிப்பு நிலையம் திறப்பு விழா!

தகவல் : நீலமேகம் பிரசாந்த்

பூண்டுலோயா கைப்புகலை பகுதியில் ஒரு கோடி ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட சிறுவர் பராமரிப்பு நிலையம் திறந்து வைக்கப்பட்டது.

நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நிதிச் செயலாளருமான மருதபாண்டி ராமேஸ்வரன் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.

குறித்த சிறுவர் பராமரிப்பு நிலையம் பாராளுமன்ற உறுப்பினர் ராமேஸ்வரன் வேண்டுகோளுக்கமைய தோட்ட வீடமைப்பு சமூதாய உட்கட்டமைப்பு அபிவிருத்தி இராஜங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஆலோசனைக்கு அமைய மனித வள அபிவிருத்தி நிதியத்தின் சுமார் ஒரு கோடி ரூபா நிதி ஒதுக்கீட்டில் சகல வசதிகளுடனும் கூடிய சிறுவர் பராமரிப்பு நிலையம் நிர்மானிக்கப்பட்டு வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

இந் நிகழ்வுக்கு நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரன் மத்திய மாகாண சபை உறுப்பினர் சத்திவேல், தலவாக்கலை நகரசபை தலைவர் பாரதிதாசன்,கொத்மலை பிரதேச சபை உறுப்பினர் யோகமூர்த்தி ,பாரதிராஜா உட்பட பலரும் கலந்துக்கொண்டனர்.

administrator

Related Articles