ஒரு ஜாண் வயிரை வளர்க்க நாம் படும் கஷ்டம் உங்கள் கண்ணுக்கு தெரியல்லையா!!

ஒரு ஜாண் வயிரை வளர்க்க நாம் படும் கஷ்டம் உங்கள் கண்ணுக்கு தெரியல்லையா!!

ஏ.ஆர்.எம்.றிபாஸ்

கிண்ணியா நிருபர்

காலநிலை சீர்கேட்டினால் கடலுக்குச் செல்லாமல் மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக – மீனவ சங்க தலைவர் பாயிஸ் தெரிவித்தார் 

கிண்ணியாவில் இன்று (05) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இவ்வாறு தெரிவிக்கப்பட்டது 

இவ்வருடம் தொடர்ச்சியாக பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாகவும், கொரோனா நோயினால் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவதில் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருவதாகவும் தெரிவித்தார் 

மேலும் நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தின் காரணமாக வாழ்கையை முன்னெடுக்க முடியாதுள்ளதாக தெரிவிக்கின்றனர் 

கடல் தொழிலில் ஈடுபடும் மீனவர்கள் அன்றன்று கடலுக்கு சொன்று மீன் பிடிப்பதனால் தான் வருமானத்தை ஈட்ட முடியும் எனவும் கடலுக்கு செல்லாததனால் தற்போது மீனவர்கள் பாரிய பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகி இருப்பதாக தெரிவித்தனர் 

எனவே உடனடியாக அரசு இதற்கான நிவாரண ஏற்பாடுகளை செய்ய வேண்டும் எனவும் மீனவர்களுக்கான நவீன தொழில்நுட்ப வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் எனவும் சுட்டிக்காட்டினர் 

administrator

Related Articles