‘ஒரு தடவ சொன்னா…’

‘ஒரு தடவ சொன்னா…’

நடிகர் ரஜினிகாந்த் எதிர்வரும் 31 ஆம் திகதி அரசியல் கட்சி தொடங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், திடீர் திருப்பமாக தான் அரசியல் கட்சி தொடங்கப்போவதில்லை என இன்று அதிரடியாக அறிவித்துள்ளார்.

தான் கட்சி தொடங்கப்போவதில்லை என்பதை விளக்கும் அறிக்கை ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார்.

அதில் தேர்தல் அரசியலுக்கு வராமல் மக்களுக்கு தன்னால் என்ன சேவை செய்யமுடியுமோ அதை செய்வேன் என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
ரஜினியின் அறிக்கை வருமாறு…

“நீங்கள் என்மேல் வைத்திருக்கும் அன்பிற்கும், பாசத்திற்கும் தலை வணங்குகிறேன். ரஜினி மக்கள் மன்றம் என்றும் போல செயல்படும்.
தேர்தல் அரசியலுக்கு வராமல் மக்களுக்கு என்னால் என்ன சேவை செய்யமுடியுமோ அதை நான் செய்வேன். நான் உண்மையை பேச என்றுமே தயங்கியதில்லை.

உண்மையையும், வெளிப்படை தன்மையையும் விரும்பும், என் நலத்தில் அக்கறையுள்ள, என்மேல் அன்பு கொண்ட என்னை வாழவைக்கும் தெய்வங்களான ரசிகர்களும், தமிழக மக்களும் என்னுடைய இந்த முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

administrator

Related Articles