குருணாகலில் வாழைப்பழத்திற்காக ஒருவர் கொலை

குருணாகலில் வாழைப்பழத்திற்காக ஒருவர் கொலை


குருணாகல் பிரதேசத்தில் ஒரு வாழைப்பழத்தின் விலை தொடர்பில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாக நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

ஹோட்டல் ஒன்றுக்கு சென்ற வாடிக்கையாளர் ஒருவர் வாழைப்பழத்தின் விலை விசாரித்துள்ளார்.

இதன்போது வாழைப்பழத்தின் விலை 30 ரூபா என கடையில் பணியாற்றுவோர் கூறியுள்ளனர்.

இதனால் வாடிக்கையாளருக்கும் கடை உரிமையாளர் உள்ளிட்ட பணியாளர்களுக்கும் இடையில் கடுமையான முரண்பாட்டு நிலைமை உருவாகியுள்ளது.

முதலில் குறித்த கடைப் பணியாளர்களை தாக்கியுள்ளதாகவும் பின்னர் பியர் போத்தல் ஒன்றை உடைத்து தாக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு வாடிக்கையாளரின் தாக்குதலுக்கு இலக்கான கடை பணியாளர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

administrator

Related Articles