ஒலிம்பிக் தீப ஓட்டம் இன்று ஆரம்பம்

ஒலிம்பிக் தீப ஓட்டம் இன்று ஆரம்பம்

ஒலிம்பிக் தீபத்தை ஜப்பான் முழுதும் எடுத்துச் செல்லும் தொடர் ஓட்டம் இன்று (25) ஜப்பானின் வடகிழக்கு நகரமான புகுசிமாவில் நடைபெறவுள்ளது.

முதல் நாளில் 15 பேர் தீபத்துடன் ஓட உள்ளனர்.

ஜப்பான் முழுவதும் 47 மாகாணங்களுக்கு மொத்தம் 121 நாட்கள் இந்த தீபம் எடுத்துச் செல்லப்படவுள்ளது.

தீபத்தை பத்தாயிரம் பேர் தொடர் ஓட்டமாக எடுத்து செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வழக்கமாக தீப ஓட்டம் பெருத்த ஆர்ப்பரிப்புடன் வெகுவிமரிசையாக நடைபெறும்.

ஆனால் கொரோனா பரவல் இன்னும் கட்டுக்குள் வராததால் குறைந்த எண்ணிக்கையிலான மக்கள் மட்டுமே தொடர் ஓட்ட நிகழ்ச்சியை பார்க்க அனுமதிக்கப்படுகிறார்கள் என ஜப்பான் ஒலிம்பிக் ஏற்பாட்டு குழு தெரிவித்துள்ளது.

சமூக இடைவெளி, கட்டாயம் முககவசம் அணிவது உள்ளிட்ட பல்வேறு கொரோனா கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் இன்றைய நிகழ்ச்சி இடம் பெறும் என அவர்கள் தெரிவித்துள்ளார்.

கொரோனா அச்சுறுத்தலால் ஓராண்டுக்கு ஒத்தி வைக்கப்பட்ட ஒலிம்பிக் போட்டி ஜூலை 23 ஆம் திகதி முதல் ஒகஸ்டு 8 ஆம் திகதி வரை ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறவுள்ளது.

இதனை முன்னிட்டு 2011 ஆம் ஆண்டு பெண்கள் உலக கிண்ண காற்பந்தாட்ட போட்டிகள் நடைபெற்றதுடன் அதில் ஜப்பான் அணி வெற்றிப் பெற்றது.

அப்போது அந்த அணிக்கு பயிற்சி அளித்த நோரியோ சசாகி முதல் நபராக தீபத்தை ஏந்தி செல்கிறார்.

administrator

Related Articles