ஓல்டன் தோட்டத் தொழிலாளிகள் பிணைவில் விடுதலை

ஓல்டன் தோட்டத் தொழிலாளிகள் பிணைவில் விடுதலை

மஸ்கெலியா ஓல்டன் தோட்டத் தொழிலாளிகள் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

அண்மையில் ஓல்டன் தோட்டத் தொழிலாளர்களுக்கும் தோட்ட நிர்வாகத்திற்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாட்டு நிலைமைகளைத் தொடர்ந்து சில தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

தோட்ட முகாமையாளரை தாக்கியதாகவே தொழிலாளர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளனர்.

சுமார் 26 தொழிலாளர்களுக்கு எதிராக இவ்வாறு மஸ்கெலிய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த முறைப்பாட்டிற்கு அமைய 10 பேரை பொலிஸார் கைது செய்து விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

விளக்கு மறியலில் வைக்கப்பட்டிருந்த 10 பேரையும், 1500 ரூபா ரொக்கப் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 16 பேரில் 12 பேர் இன்று நீதிமன்றில் ஆஜராகியதுடன் அவர்களுக்கும் பிணை வழங்கப்பட்டுள்ளது.

சட்டத்தரணி நேருகருணாகரன் உள்ளிட்டவர்கள் இந்த தொழிலாளர்களை விடுதலை செய்வதற்கான நீதிமன்றில் ஆஜராகியிருந்தனர்.

administrator

Related Articles