ஓல்டன் தோட்ட பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி ! எதிர்வரும் 10 ஆம் திகதி சமரச பேச்சு! நகுலேஸ்

ஓல்டன் தோட்ட பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி ! எதிர்வரும் 10 ஆம் திகதி சமரச பேச்சு! நகுலேஸ்

ஹொரண பெருந்தோட்டக் கம்பனிக்குட்பட்ட ஓல்டன் தோட்ட நிர்வாகத்துக்கும் அந்தோட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கும் இடையிலான முறுகல்நிலை தொடர்ந்து நீடித்துவரும் நிலையில், இரு தரப்பினரையும் சமரசப்படுத்த மேற்கொள்ளப்பட்டுள்ள முயற்சிகள் பயனளிக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது..

இந்நிலையில், குறித்த தோட்ட நிர்வாகத்துடனான பேச்சுவார்த்தையொன்று, இம்மாதம் 10ஆம் திகதி புதன்கிழமை இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஓல்டன் தோட்ட நிர்வாகத்துக்கு எதிராக, கடந்த மாதம் 2ஆம் திகதி முதல் பணிப் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டிருக்கும் ஓல்டன் தோட்ட தொழிலாளர்களுக்கும் தோட்ட நிர்வாகத்துக்கும் இடையிலான சமரசப் பேச்சுவாத்தையொன்று, தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளர் ஜி.நகுலேஸ்ரன் தலைமையில், நேற்று (05) மாலை இடம்பெற்றது.

தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரத்தின் பணிப்புரைக்கமைய இடம்பெற்ற இப்பேச்சுவாத்தை, கவரவில தோட்டக் காரியாலயத்தில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, ஓல்டன் தோட்டத்தின் நான்கு பிரிவுகளைச் சேர்ந்த அனைத்துத் தொழிற்சங்க தலைவர்கள், தொழிலாளர் தேசிய சங்கத்தின் உப தலைவர் ரட்ணசாமி உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

பிராந்திய முகாமையாளர் வசந்த குணவர்தனவுடன் இடம்பெற்ற இப்பேச்சுவார்த்தையில், பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள 600க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை மீண்டும் பணிக்குத் திரும்பச் செய்தல் தொடர்பிலும் நீதிமன்ற விசரணையிலிருக்கு இரு வேறு சம்பவங்கள் தொடர்பிலும், பாதிக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதன்போது, பழனி திகாம்பரம் எம்.பி மற்றும் முதலாளிமார் சம்மேளனத்தில் பேச்சாளர் ரொஷான் ராஜதுரை ஆகியோருக்கு இடையில், அலைபேசியூடாகவும் பேச்சுவத்தை இடம்பெற்றுள்ளது.

இருப்பினும், இதன்போது சமரசம் ஏற்படாத நிலையில், மீண்டும் 10ஆம் திகதியன்று பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளதாக, நகுலேஸ்வரன் தெரிவித்தார்.

administrator

Related Articles