கடந்த மூன்று நாட்களில் ஆல்பர்ட்டா மாகணத்தில் 3 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ்! 20 பேர் உயிரழப்பு!

கடந்த மூன்று நாட்களில் ஆல்பர்ட்டா மாகணத்தில் 3 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ்! 20 பேர் உயிரழப்பு!

கனடா நாட்டின் பொருளாதார கேந்திர மாகாணமாக கருதப்படும் ஆல்பர்ட்டா மாகணத்தின் கொரோனா வைரஸ் பரவும் தன்மை தீவிரமடைந்து இருப்பதாக மாகண பிரதம வைத்திய அதிகாரியான டாக்டர் டீனா ஹின்ஷோ கூறுகிறார்.

கடந்த வெள்ளிக்கிழமை புதிதாக கொண்டு வரப்பட்ட கட்டுப்பாடுகள் போதாது என்றும் தற்போத அபாயகரமான நிலையை மாகணம் எதிர்நோக்குவதாக இன்று மாலை அறிவித்தார்.

கடந்த வார இறுதியில் 2 ஆயிரம் கொரொனா வைரஸினால் பாதிக்கப்பட்டனர்.அத்துடன் புதிதாக இன்று 860 பேர் வைரஸினால் பீடிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை மாகணத்தில் 427 பேர் உயிரழந்துள்ளனர். அத்துடன் 264 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் 57 பேர் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

3

administrator

Related Articles