கடனுக்கு வாங்கிய லாட்டரிக்கு 1 கோடி பம்பர் பரிசு! x

கடனுக்கு வாங்கிய லாட்டரிக்கு  1 கோடி பம்பர் பரிசு! x

நேர்மை எப்போதும் வியப்புக்குரியதாகவே இருக்கும். கடவுளின் தேசம் என்று வர்ணிக்கப்படும் கேரளாவில் அப்படியொரு வியப்புக்குரிய சம்பவம் நடந்துள்ளது. ‘மனி இஸ் ஆல்வேஸ் அல்டிமேட்’ பணம் பிரதானமானது என்று காலரை தூக்கிவிட்டு திரியும் சிலருக்கும் பாடமாக இருக்கிறார் ஸ்மிஜா. கேரளாவில் லாட்டரி சீட்டு விற்கும் ஸ்மிஜாவின் நேர்மையை இப்போது எல்லாரும் பாராட்டத் தொடங்கி இருக்கிறார்கள். லாட்டரியே ஒரு சூதாட்டம் மாதிரிதான் சார் இதுல என்ன சார் நேர்மைனு சொல்றீங்களா. முதல்ல சொன்ன அந்த வரிதான் எளிய மனிதர்களின் நேர்மை வியப்புக்குரியதுன்னு.

ஆலுவா பகுதியை சேர்ந்த சந்திரனுக்கு லாட்டரி வாங்கும் பழக்கம் உள்ளது. கேரளாவில் லாட்டரி சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்பட்டுள்ளது. கோடை பம்பர் லாட்டரியில் சந்திரனுக்கு 6 கோடி ரூபாய் பரிசு விழுந்துள்ளது. SD 316142 அப்படிங்கிற எண் கொண்ட லாட்டரியை சந்திரன் கடனாகதான் வாங்கியுள்ளார். நேரில் பார்க்கும்போது பணம் தர்றேன் அப்படின்னு லாட்டரி ஏஜெண்டான ஸ்மிஜாவிடம் கூறியுள்ளார்.

எர்ணாகுளம் மாவட்டம் பட்டிமட்டம் பகுதியில்தான் ஸ்மிஜா மோகன் லாட்டரி விற்பனை செய்து வருகிறார். ஸ்மிஜாவிடம் ஒரு 12 லாட்டரி டிக்கெட்டுகள் விற்காமல் இருந்துள்ளது. இதனையடுத்து தன்னிடம் வழக்கமாக லாட்டரி வாக்கும் நபர்களுக்கு போன் செய்து லாட்டரி வாங்க கொள்கிறீர்களா எனக் கேட்டுள்ளார். அப்படித்தான் சந்திரனுக்கும் இவர் போன் செய்துள்ளார். அவரும் SD 316142 என்ற எண் கொண்ட லாட்டரியை வாங்கிக்கொள்வதாகவும் நேரில் பார்க்கும்போது பணத்தை தருவதாக போனில் கூறியுள்ளார்.

ஞாயிறு மாலை தான் விற்பனை செய்த லாட்டரிக்கு முதல் பரிசு விழுந்துள்ளது ஸ்மிஜாவுக்கு தெரியவந்துள்ளது. யார் லாட்டரியை வாங்கியது என பார்த்தபோது சந்திரன் என்பது தெரியவந்தது. SD 316142 லாட்டரி இப்போதும் ஸ்மிஜா கையில்தான் உள்ளது. சந்திரன் லாட்டரியையும் வாங்கவில்லை அதற்கான காசும் கொடுக்கவில்லை. லாட்டரியை வாங்கிக்கொள்கிறேன் வந்து பணம் தருகிறேன் என்ற உத்தரவாதத்தை மட்டுமே கொடுத்துள்ளார். ஸ்மிஜா நினைத்திருந்தால் அந்த லாட்டரிக்கு சொந்தம் கொண்டாடி இருக்கலாம். முதல் பரிசான 6 கோடியை தானே வாங்கி இருக்கலாம். இல்லையென்றால் அதில் பாதி பங்குத் தொகை வேண்டும் என உரிமைக்கோரி இருக்கலாம். ஸ்மிஜா அப்படி செய்யவில்லை சந்திரனை தேடி ஓடியுள்ளார். அவரது வீட்டுக்கு சென்றவர் லாட்டரிக்கான கட்டணமாக 200 ரூபாயை வாங்கிக்கொண்டு அவரது கையில் லாட்டரியை கொடுத்துவிட்டார்.

ஸ்மிஜாவின் செயலைக்கண்டு வியந்த சந்திரன் கண்ணீர் மல்க அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார். சந்திரன் அந்தப்பகுதியில் உள்ள பள்ளியில் தோட்ட பராமரிப்பாளராக பணியாற்றி வருகிறார். அவருக்கு மனைவி, இரண்டு பெண் குழந்தைகள்,ஒரு மகன் உள்ளனர். இதுகுறித்து பேசியுள்ள சந்திரன், நீண்ட வருடங்களாக லாட்டரியை வாங்கி வருகிறேன். எனக்கு ஆறுதல் பரிசு மட்டுமே கிடைக்கும். இப்போது தான் முதல்முறையாக பம்பர் பரிசு அடித்துள்ளது. எனது மூத்த மகள் வீடு கட்டிக்கொண்டிருக்கிறார். அவருக்கு இந்த பணத்தின் மூலம் வீடு கட்ட உதவி செய்வேன். எனது இரண்டாவது மகளுக்கு திருமணம் செய்து வைப்பேன், எனது மகனின் படிப்பு செலவை பார்த்துக்கொள்வேன்” என்றார்.

administrator

Related Articles