கண்டி அணிக்கு “கட்டம்” சரியில்ல .. 29 எக்ஸ்ரா ஓட்டங்களை கொடுத்து கிங்ஸிடம் படுதோல்வி!

கண்டி அணிக்கு “கட்டம்” சரியில்ல .. 29 எக்ஸ்ரா ஓட்டங்களை கொடுத்து கிங்ஸிடம் படுதோல்வி!

ஹம்பாந்தோட்டையில் நேற்று நடைப்பெற்ற 13 வது LPL போட்டியில் கண்டி அணி தங்களது ரசிகர்களை தலை குனிய செய்யும் லெவலுக்கு கொண்டு சென்றது.

இந்த மெட்சை பற்றி எழுதாமல் இருக்க பார்த்தோம் பல அன்பு உள்ளங்கள் ( கொழும்பு கிங்ஸ் பேன்கள் ) கொடுத்த நச்சரிப்பு தாங்கமல் இதை எழுதுகிறோம்.

ஆடுகளத்தின் தன்மையை கொஞ்சம் கூட சீரியஸாக எடுக்காத கண்டி அணி நாணய சுழற்சியில் வெற்றி பெற்றதும் முந்திரி கொட்டை மாதிரி முந்தி கொண்டு முதலில் துடுப்பெடுத்தாடியது.

அட பாவமே .. என்று சொல்லும் அளவிற்கு அவர்கள் ஆடின ஆட்டத்தை சொல்லவே வெட்கமா இருக்குது இதில் இலங்கை அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர்களான குசல் பெரேரா , குசல் மென்டிஸ், குணரத்ன ஆகியோர் சேர்ந்து மொத்தமாக எடுத்த ஒட்டம் 12 இப்படி போன மெட்சை பற்றி என்ன சொல்றது.

ஷப்பா கண்ணை கட்டுது ஸ்கோருக்கு போவோம்

கண்டி டஸ்கர்ஸ் அணி 19.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து பெற்ற ஓட்டம் 105

இதை வச்சி …. உங்க மனசு விழங்குது , ஆனால் கொழும்பு கிங்ஸை பாரட்டாமல் இருக்க முடியுமா…அவர்கள் பந்து வீச்சில் எப்படி ஒழுக்கத்தை கடைபிடிச்சாங்களோ அதை விட ஒரு படி மேலகாக துடுப்பாட்டத்தில் ஸ்மார்டாக ஆடினாங்க.

அவர்கள் வெற்றி இலக்கை 14.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 108 ஓட்டங்களோடு அருமையாக அடைந்தார்கள்.

சந்திமால் இந்த போட்டியிலும் ஆட்டமிழக்காமல் 35 ஓட்டங்களை பெற்றார்.

இதில் முக்கிய குறிப்பு கண்டி டஸ்கர்ஸ் அணி கொடுத்த எகஸ்ரா ஓட்டங்கள் எத்தனை தெரியுமா 29 இதில் 16 வைடுகள். கடைசியில் கிங்ஸ் அணி 7 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது.

இதுக்கு மேல எதை சொல்ல….

administrator

Related Articles