கனடாவில் அதிகளவு உணவு விரயமாக்கப்படுகின்றது

கனடாவில் அதிகளவு உணவு விரயமாக்கப்படுகின்றது

கனடாவில் அதிகளவில் உணவு விரயமாக்கப்படுகின்றது என தெரிவிக்கப்படுகின்றது.

உலகளாவிய ரீதியில் உணவு விரயமாக்கப்படுவது குறித்து வெளியான ஐக்கிய நாடுகள அமைப்பின் அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உலக அளவில் ஆண்டு தோறும் சுமார் 17 வீதமான உணவு விரயமாக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

உணவு விரயமாக்கப்படுவதனை தடுப்பதன் மூலம் பல்வேறு நலன்களை அடைய முடியும் என ஐக்கிய நாடுகள்  அமைப்பு தெரிவித்துள்ளது.

இதேவேளை, கனடாவில் சராசரியாக நபர் ஒருவர் ஓர் ஆண்டுக்கு 79 கிலோ கிராம் எடையுடைய உணவுப் பொருட்களை விரயம் செய்கின்றார் என தெரிவிக்கப்படுகின்றது.

ஒப்பீட்டளவில் இது அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவை விடவும் அதிகமானது என்பது குறிப்பிடத்தக்கது.

administrator

Related Articles