கம்பனிகளை அரசாங்கத்திடம் ஒப்படைத்து விட்டு போங்க! புஸ்பா ஆவேசம்!!

கம்பனிகளை அரசாங்கத்திடம் ஒப்படைத்து விட்டு போங்க! புஸ்பா ஆவேசம்!!

“பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்க
இன்னும் ஓரிரு நாட்களில் அதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியாகும்.நிலையில் அன்றைய நாளில் இருந்து சம்பள உயர்வு கிடைக்கும். வழங்க மறுக்கும் நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்.” – என்று தொழில் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்துள்ள நிலையில்
கூட்டு ஒப்பந்தத்திலிருந்து தமது சங்கம் வெளியேறுகின்றது என்று பெருந்தோட்ட நிறுவனங்களின் சம்மேளன அதன் பேச்சாளர் ரோசன் ராஜதுரை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுன தோட்ட தொழிலாளர் சங்கத்தின் நுவரெலிய மாவட்ட இணைப்பு செயலாளர் வி.புஸ்பானந்தன்
கூட்டு ஒப்பந்தத்தில் இருந்து கம்பனிகள் வெளியேற வேண்டாம். தோட்ட கம்பனிகளை அரசாங்கத்திற்கு ஒப்படைத்து விட்டு தோட்டங்களில் இருந்து வெளியேறுங்கள் என்று கருத்து வெளியிட்டார்

administrator

Related Articles