கராத்தே பயிற்சி சான்றிதழ் வழங்கும் நிகழ்வு!!

கராத்தே பயிற்சி சான்றிதழ் வழங்கும் நிகழ்வு!!

(நாஸர் இஸ்மாயில்)

ஜப்பான் கராத்தே டூ சொடோகான் ஸ்டடி அஸோசியேஷன் அமைப்பினரால் ஓட்டமாவடி தேசிய பாடசாலை, வாழைச்சேனை இந்துக்கல்லூரி ஆகிய பாடசாலைகளிலிருந்து கராத்தே பயிற்சியில் ஈடுபட்டு வரும் மாணவர்களுக்கான ஒரு நாள் பயிற்சி செயலமர்வும், தர நிர்ணயப் பயிற்சியும் வாழைச்சேனை இந்துக்கல்லூரி பிரதான மண்டபத்தில் 26 ,27ம் திகதிகளில் நடைபெற்றது.

இந்நிகழ்வானது ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் பகுதி நேர கராத்தே பயிற்சி ஆசிரியர் ARM.நவாஸ் மற்றும் இந்துக்கல்லூரி பகுதி நேர கராத்தே பயிற்சி ஆசிரியர் சதாநந்த குமார் மற்றும் திரு ஜோசப் ஆகியோரின் வழிகாட்டுதலுடன் ஜப்பான் கராத்தே டூ சொடோகான் ஸ்டடி அஸோசியேஷன் பிரதான பயிற்றுவிப்பாளர் ஹேரத் முதியான்ஷலாகே விஜயகுமாரவின் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்விற்கு பிரதம அதிதிகளாக ஓட்டமாவடி தேசிய பாடசாலை அதிபர் எம்.ஏ.எம்.ஹலீம் இஸ்ஹாக்,?வாழைச்சேனை இந்துக்கல்லூரி அதிபர் திரு A.ஜெயஜீவன் ஆகியோரும் கலந்து கொண்டு இப்பயிற்சிநெறியில் பங்குபற்றிய மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி வைத்தனர்.

administrator

Related Articles