கரைச்சியில் “நடுகை” சஞ்சிகை வெளியீடு!!

கரைச்சியில் “நடுகை” சஞ்சிகை வெளியீடு!!

அம்பலம் குழுமத்தின் வெளியீடான செல்வி.ஜனகா நீக்கிலாஸ் அவர்களின் நடுகை மாதாந்த சஞ்சிகையின் வெளியீட்டு விழா இன்று பி.ப 4.00 மணியளவில், கரைச்சி பிரதேச சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

ஈழத்து இலக்கிய வரலாற்றில் தனி இடம் பதித்துக் கொண்ட கவிஞர் தீபச்செல்வன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் முதன்மை விருந்தினராக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்


வரவேற்புரையை துணுக்காய் வலயக்கல்வித் திணைக்களத்தின் தமிழ்ப்பாட ஆசிரிய ஆலோசகர் சு.லோகேஸ்வரனும் அறிமுக உரையினை கவிஞர் சு.க. சிந்துதாசன் அவர்களும் வழங்கினர்.
அதேவேளை, ஆசிரியர் சத்தியானந்தனின் நெறியாள்கையில் அரங்காலயா நாடகமன்றத்தின் “பேசாத நிலவு ” என்னும் கவிதை ஆற்றுகையும் இடம்பெற்றது.

administrator

Related Articles