கற்றல் உபகரணங்களை வழங்கிய மட்டக்களப்பு BUDS அமைப்பு!!

கற்றல் உபகரணங்களை வழங்கிய மட்டக்களப்பு BUDS அமைப்பு!!

மட்டக்களப்பு நலிவுற்றோர் அபிவிருத்தி சங்கத்தினால் (BUDS) யாழ். மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான ஒரு தொகுதி கற்றல் உபகரணங்கள் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் அவர்களின் தலைமையில் இன்று (25) காலை 8.30 மணிக்கு மருதங்கேணி, கோப்பாய், சங்கானை பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள தெரிவுசெய்யப்பட்ட பாடசாலை அதிபர்களிடம் கையளிக்கப்பட்டது.

இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர், உதவி மாவட்டச் செயலாளர், பிரதேச செயலாளர் ( மருதங்கேணி), மாவட்ட சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு இணைப்பாளர், மாவட்ட இணைப்பதிகாரி (BUDS) மற்றும் மாணவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

administrator

Related Articles