கலாபூஷணம் விருதுபெற்ற கலைஞன் குலாம் மீராசாஹிப் நினைவேந்தல் தினம்

கலாபூஷணம் விருதுபெற்ற  கலைஞன் குலாம் மீராசாஹிப்  நினைவேந்தல் தினம்

எஸ்.எம்.எம்.முர்ஷித்.

கல்குடா தொகுதி முஸ்லீம் பிரதேசத்தின் மூத்த கலைஞர் பல்கலைக்கழகம் செல்லாமலே கலாபூஷணம் விருதுபெற்ற மீராசாஹிப்பின் எட்டாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு வாழைச்சேனை இக்பால் கலை மன்hறம் மற்றும் சுஹதாக்கள் அமைப்பு ஆகியன இணைந்து நடாத்திய 8வது நினைவேந்தல் தினமும் துஆ பிராத்தனையும் வாழைச்சேனை இக்பால் சனசமூக நிலைய மண்டபத்தில் நடைபெற்றது.இக்பால் கலை மன்றத் தலைவர் ஏ.எல்.எம்.லியாப்தீன் ஜே.பி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதேசத்தின் பல்வேறுபட்ட கலைஞர்கள் கலந்து கொண்டதுடன் அன்னாரின் குடும்பத்தினரும் கலந்து கொண்டனர்  அத்துடன் அந்நாரினால் சமூகத்துக்காக ஆற்றிய சேவைகள் மற்றும் அவர் புரிந்த சாதனைகள் செயற்பாடுகள் குறித்து பல்துறை கலைஞர்ககளால் உரை நிகழ்த்தப்பட்டதுடன் அன்னாரின் மருமை வாழ்விற்காக வேண்டி துவாஆப்  பிறாத்தனையும் இடம் பெற்றது.

இந்நிகழ்வை காகம் பதிப்பகத்தின் பணிப்பாளர் ஏ.பிஎம்.இர்பான் ஆசிரியர் நெரிப்படுத்தியதுடன் பிரதேச கலைஞர்களும் கலந்து கொண்டனர்

administrator

Related Articles