நூருல் ஹுதா உமர்
கல்முனையில் சுமார் 31 வருடங்களாக இயங்கி வருகின்ற சமாதான பாலர் பாடசாலையினால் நேற்று (17) சிறுவர்களுக்கான விளையாட்டுப்போட்டி நிகழ்ச்சி ஒன்று சமாதான பாலர் பாடசாலையின் பணிப்பாளர் எம்.எச். ஹிஜ்ரா தலைமையில் கமு/கமு/அல்- பஹ்றியா தேசிய பாடசாலை மைதானத்தில் ஏற்படாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கல்முனை மாநகர முன்னாள் பிரதிமுதல்வரும், ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய ஒருங்கிணைப்புச் செயலாளரும், கல்முனை ரஹ்மத் பவுண்டேஷன் ஸ்தாபகருமான ரஹ்மத் மன்சூர் கலந்துகொண்டார். மேலும் அதிதிகளாக கல்முனை கமு/கமு/ அல்- பஹ்றியா தேசிய பாடசாலை அதிபர் எம்.எஸ்.எம். பைசல், பிரதி அதிபர் ஈ. றினோஸ் ஹஜ்மீர், விளையாட்டு ஆசிரியர் எம்.எம்.றியால், அல்-பஹ்றியா பழைய மாணவிகள் அமைப்பின் செயலாளரும் ஆசிரியையுமான எம்.எம்.நஜீனா லாபீர், நைட்டா போதனாசிரியர் பொறுப்பாளர் திரு. எம்ரீ. அஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
போட்டி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பெற்ற சிறார்களுக்கு பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டன.
மேலும் ரஹ்மத் பவுண்டேஷன் மூலம் போட்டியில் கலந்துகொண்ட அனைத்துச் சிறார்களுக்குமான பாடசாலை உபகரணங்கள் ரஹ்மத் பவுண்டேஷன் ஸ்தாபகர் ரஹ்மத் மன்சூர் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டன. இந்நிகழ்வில் குறித்த சிறுவர்களின் பெற்றோர்கள், ஊர்மக்கள், நலன்விரும்பிகள் என பலர் கலந்துகொண்டனர்.