கல்முனை பிரதேச செயலக காரியாலயச்செயற்பாடுகள் ஒரு தினம் மாத்திரம் வரையறுப்பு

கல்முனை பிரதேச செயலக காரியாலயச்செயற்பாடுகள் ஒரு தினம் மாத்திரம் வரையறுப்பு

(சர்ஜுன் லாபீர்)

கல்முனை பிரதேச செயலக காரியாலயச் செயற்பாடுகள் இன்றைய தினம் மாத்திரம் வரையரை செய்யப்பட்டு சேவைகள் நடைபெறுகின்றது. வழமை போன்று நாளைய தினம் பொது மக்கள் சேவைகள் நடைபெறுமென கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம்.நஸீர் தெரிவித்தார்.

சில சமூக வலைத்தளங்கள் மற்றும் இணையத்தளங்களில் கல்முனை பிரதேச செயலகம் எதிர்வரும் திங்கள் வரை முடக்கப்படுமென்றும், அங்குள்ள ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள் என்கின்ற செய்திக்கு விளக்கமளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

எனவே, வதந்திகளை நம்ப வேண்டாமெனவும் நாளைய தினம் வழமையான செயற்பாடுகள் நடைபெறுமெனவும் பொது மக்களுக்கு அறியத்தருவதாக பிரதேச செயலாளர் குறிப்பிட்டார்.

administrator

Related Articles