கல்வியமைச்சரின் அறிவிப்பு

கல்வியமைச்சரின் அறிவிப்பு

மேல் மாகாணத்தில் பாடசாலைகளை ஆரம்பிக்கும் நடவடிக்கை மேலும் தாமதமாகலாம் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

முடக்கப்படாத இடங்களிலுள்ள பாடசாலைகள் தொடர்பாகவே தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவை ஜனவரி 11 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

கொழும்பில் நேற்று (30) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை கூறியுள்ளார்.

(தற்போதைய நிலையில் கொழும்பு மாவட்டத்திலும், கம்பஹா மாவட்டத்திலும் பாடசாலைகளை திறப்பது சற்றுக் கடினம். ஊழுஏஐனு-19 நிலைமை குறித்து நாம் தொடர்ந்தும் கவனம் செலுத்தி வருகிறோம். இயலுமான வரையில் விரைவாக அவற்றைத் திறப்போம். முடக்கப்படாத ஏனைய பிரதேசங்களில் திட்டமிட்டபடி ஜனவரி 11 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும்)

administrator

Related Articles