கழிவறை மற்றும் ஓய்வு அறைகள் திட்டம்!முதற்கட்டமாக கொட்டக்கலை ஸ்டொனிக்கிளிப்பில் அடிக்கல் !

கழிவறை மற்றும் ஓய்வு அறைகள் திட்டம்!முதற்கட்டமாக கொட்டக்கலை ஸ்டொனிக்கிளிப்பில் அடிக்கல் !

தகவல் : நீலமேகம் பிரசாந்த்

மலையக தோட்ட தொழிலாளர்களின் எதிர்கால நலன் கருதி தோட்டப்புறங்களில் பணிப்புரியும் மக்களுக்கான கழிவறை வசதிகள் உட்பட ஓய்வறைகள் பெருந்தோட்டப்பகுதி முழுவதும் அமைப்பதற்கான செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளன.அதன் முற்கட்டமாக இன்று கொட்டக்கலை ஸ்டொனிக்கிளிப் தோட்டத்தில் அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.

இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் நிதி ஒதிக்கீட்டின் கீழ் ஆரம்பிக்க இவ்வேலைத்திட்டத்தில் கொட்டகலை பிரதேச சபை தலைவர் ராஜமணி பிரசாந்த் மற்றும் கொட்டகலை பிரதேச சபையின் உபத்தலைவர் முத்துராமலிங்கம் ஜெயகாந்த்,கொட்டகலை பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் தோட்ட முகாமையாளர்,
பொதுமக்கள் என பலரும் கலந்துக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

administrator

Related Articles