வடக்கு காஸா பகுதியில் உள்ள மக்கள் விரைவில் தெற்கு காசா பகுதிக்கு செல்ல வேண்டும்
காஸா பகுதியில் தாக்குதல்களை தீவிரப்படுத்தப் போவதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.
எனவே வடக்கு காஸா பகுதியில் உள்ள மக்கள் விரைவில் தெற்கு காசா பகுதிக்கு செல்ல வேண்டும் என இஸ்ரேல் இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இஸ்ரேலிய இராணுவக் குழுக்கள் காசா பகுதிக்கு அருகில் குவிந்துள்ளன, ஒரு கட்டத்தில் காசா பகுதியை ஆக்கிரமிக்கக்கூடும் என்று போர் விமர்சகர்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை சுமார் மூன்று மில்லியன் பலஸ்தீனர்கள் வாழும் மேற்கு எல்லையில் இஸ்ரேலியப் படைகள் தாக்குதல்களை அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.