காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களை சந்தித்தார் டக்ளஸ்

காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களை சந்தித்தார் டக்ளஸ்

காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா யாழ்ப்பாணத்தில் இன்று சந்தித்து கலந்துரையாடினார்.

காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களை சந்திப்பதற்காக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா யாழ். மாவட்ட செயலகத்திற்கு இன்று சென்றிருந்தார்.

இதன்போது, அமைச்சர் பயணித்த வாகனத்தை மறித்து சிலர் கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து, காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களுடன் அமைச்சர் கலந்துரையாடினார்.

இந்த கலந்துரையாடலின் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களைக் கொண்ட 12 பேர் கொண்ட குழுவொன்று அமைக்கப்பட்டது.

administrator

Related Articles