காலி அணியை தாக்கிய யாழ் புரெவி புயல்! அவிஷ்கவின் அதிரடி ஆட்டம் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்!

காலி அணியை தாக்கிய யாழ் புரெவி புயல்!  அவிஷ்கவின் அதிரடி ஆட்டம் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்!

ஹம்பாந்தோட்டையில் இன்று நடைப்பெற்ற 9 வது LPL. போட்டியில் யாழ்  ஸ்டாலியன்ஸ்  5     விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது.

வழமை போல இன்றைய போட்டியிலும் தமிழ் வீரருக்கு வாய்ப்பை வழங்காமல் தண்ணீர் கொடுப்பதற்கும் கை தட்டுவதற்கும் மாத்திரம் வைத்திருந்த பெருமை யாழ் அணியின் நிர்வாகத்தையே சாரும்.

உலகம் முழுவதும் வாழும் இலங்கை தமிழர்கள் ஆவலோடு எதிர்பார்த்திருக்கும் தருணம் இன்றும் உருவாகமை வேதனையே.

ஆனால் யாழ் அணி இதுவரை நடந்த போட்டிகளில் தோல்வியை தழுவாமல் வெற்றி அணியாக இருப்பது யாழ் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் என்பதை மறுக்கவும் முடியாது.

இன்றைய  நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற காலி அணி  பானுக்க ராஜபக்ஸ தலைமையில் களமிறங்கியது. தங்களது அணித்தலைவரான சயிட் அப்ரிடி அவசரமாக பாகிஸ்தான் சென்றதனாலே இந்த மாற்றம்.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய காலி கிளாடியேட்ர்ஸ் தங்களது 20 ஓவர்களில் 6. விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 170 ஓட்டங்களை பெற்றது.

இதில்  தனுஷ்க குணதிலக்க 56 ஓட்டங்களையும் வோல்டன் 31 ஓட்டங்களையும் பெற்றனர்.

காலி அணியின் பின்வரிசை துடுப்பாட்ட வீரர்கள் கொஞ்சம் கவனமாக அடித்திருந்தால் இலகுவாக ஓட்டங்களை 200 வரை உயர்த்திருக்கலாம் என போட்டியை பார்த்தவர்கள் சொல்கிறார்கள். அவர்கள் இறுதி ஓவர்களை கையாண்ட முறை ரொம்ப சின்னப்புள்ள தனமாக இருந்தது

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய யாழ் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான அவிஸ்க பெர்ணான்டோ இன்றும் இடி போல அடித்தார்.

புரெவி புயல் போல வந்த பந்துகளை விலாசி   84 ஓட்டங்களை 59   பந்துகளுக்கு 7பவுண்டரிகள் 5 சிக்ஸர்கள் அடங்கலாக பெற்றார்.

அவருக்கு துணையாக முதலாம் விக்கெட் வீழ்ந்த பின்னர் ஜோடி சேர்ந்த மினோத் பனுக்க 40 ஓட்டங்களை பெற்றார்.

மூன்றாம் விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த அணித்தலைவர் திசிர பெரேரா  அவதனமாக ஆடியது மட்டுமல்ல அதிகமாக துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை அவிஷ்க பெர்ணான்டோவிற்கு வழங்கியதை காண கூடியதாக இருந்தது.

துரதிஷ்டவசமாக அவர் 9 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார்.

அதன்பின்னர் இறுதியாக ஆட வந்த ஹசரங்க கொஞ்சம் கூட அசராமல் மொகமட் அமீரின் அதிரடியாக தாம் எதிர்கொண்ட முதல் மூன்று பந்துகளில் மூன்று பவுண்டரிகளையும் ஆறாவது பந்துக்கு போன போகுது என்று இன்னொரு பவுண்டரியையும் 19 ஓவரில் விலாசி அணியின் வெற்றி வாய்ப்பை இலகுப்படுத்தினார். அவர் ஆட்டமிழக்காமல் 17 ஓட்டங்களை பெற்றார்.

administrator

Related Articles