காஸா மக்களுக்கு ஆதரவினை வெளியிட்டு கனடாவில் போராட்டம்

Share

Share

Share

Share

காஸா பிராந்திய மக்களுக்கு ஆதரவினை வெளியிட்டு கனடாவின் பல்வேறு நகரங்களில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

காஸாவில் போர் நிறுத்தம் அமுல்படுத்துவது தொடர்பில் அமெரிக்காவிற்கும் அரேபிய நேச நாடுகளுக்கும் இடையில் உடன்பாடு எட்டப்படவில்லை.

இவ்வாறான ஓர் பின்னணியில் கனடாவின் பல நகரங்களில் போராட்டங்களும் பேரணிகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

காஸா பிராந்தியம் மீது இஸ்ரேல் படையினர் தொடர்ச்சியாக தாக்குதல்களை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ரொறன்ரோ, மொன்றியால், ஒட்டாவா, பிரிட்ரிக்சன் உள்ளிட்ட பல நகரங்களில் போராட்டங்களும் பேரணிகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

பலஸ்தீன இளைஞர் அமைப்பு என்ற அமைப்பினால் போராட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பிராந்திய வலயத்தில் உடன் போர் நிறுத்தம் அமுல்படுத்தப்பட வேண்டும் எனவும், மனிதாபிமான உதவிகளை வழங்குவது குறித்த வரையறைகளை தளர்த்த வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.

ஒட்டாவாவில் கோவிட் காரணமாக நோயாளிகள் மருத்துவமனைகளில்...
ரொறன்டோவில் வீட்டு விற்பனையில் பின்னடைவு
கனடாவில் மாணவர்கள் தொழில்களில் ஈடுபடுவதில் சிக்கல்
விடுமுறைக் காலத்தில் ஒன்றாரியோ மக்கள் செலவுகளை...
ரொறன்ரோ நகராட்சி இடைத் தேர்தலில் தமிழர்...
ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலை சம்பவம்...
கனடா முழுவதிலும் போலி நாணயக் குற்றிகள்
நாட்டின் கல்வித்துறையில் பாதக மாற்றம்
ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலை சம்பவம்...
கனடா முழுவதிலும் போலி நாணயக் குற்றிகள்
நாட்டின் கல்வித்துறையில் பாதக மாற்றம்
டொரண்டோவில் மிகவும் மோசமான குளிர்