கியூபெக் சிட்டியில் ஹாலோவின் கோரம் !இருவர் பலி 5 பேர் காயம் ( video)

கியூபெக் சிட்டியில் ஹாலோவின் கோரம் !இருவர் பலி 5 பேர் காயம் ( video)

கனடாவின் கியூபெக் மாகணத்தின் கியூபெக் சிட்டியில் நேற்றிரவு இந்த கோர சம்பவம் இடம்பெற்றது.

ஹலோவின் கொண்டாட்டாங்களில் மக்கள் ஈடுப்பட்டு கொண்டிருந்த  இருந்த வேளையில்  பண்டைய வீரனை போன்று உடை அணிந்து வந்த 24 வயது இளைஞர் தனது வாளை எடுத்து ஏழு பேரை வெட்டியும் குத்தியும் இருக்கிறார்.

இரவு 10: 30 அளவில் சந்தேகநபர் நான்கு இடங்களில் நடமாடியதாகவும் அந்த நேரத்திலே இந்த தாக்குதலை நடத்தி இருக்கிறார்.

கத்தி குத்துக்கு இலக்கானவர்களில் இருவர்  உயிரிழந்தனர் . மற்றைய ஐவரும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சந்தேகநபரை பொலிசார் சுற்றிவளைத்து தேடி உள்ளனர். சுமார்
இரண்டரை மணித்தியாள தேடுதலின் பின்னர் சந்தேகநபரை நகரத்தின் ஓல்ட் போர்ட் பகுதியில் பிடித்துள்ளனர்.

சம்பவ வீடியோ வயது வந்தவர்கள் மட்டும் பார்க்கவும் .. தயவுசெய்து பயந்தவர்கள் பார்ப்பதை தவிர்க்கவும்

அவரும் தற்போது சிகிச்சைக்காக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். இவர் எந்த வித தீவிரவாத அமைப்பிற்கும் தொடர்பு அற்றவர் என பொலிசாரின் ஆரம்ப விசாரனைகளில் தெரிவித்துள்ளனர்.

இது தனிப்பட்ட காரணங்களுக்காகவும் அதிக சேதங்களை ஏற்படுத்துவதற்காகவும் செய்யப்பட்ட காரணமாக இருக்கலாம் என பொலிசார் கூறுகிறார்கள்.

இந்த சந்தேகநபருடன் வேறு யாரவது தொடர்பு வைத்திருந்தார்களா என்பது குறித்தும் பொலிசார் ஆராய்கின்றனர்.

மேலும் இந்த சம்பவத்தை அடுத்து அப்பகுதி மக்கள் பதற்றத்துடன்  இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

பிரதமர் அறிக்கை

கியூபெக் சிட்டியில் நேற்றிரவு இடம்பெற்ற சம்பவம் குறித்து பிரதமர் தமது கவலையை வெளியிட்டுள்ளார்.

administrator

Related Articles