கிறேன்பாஸ் கஜீமா வத்தையில் தீ பரவல்…50 வீடுகள் சேதம்

கிறேன்பாஸ் கஜீமா வத்தையில்  தீ பரவல்…50 வீடுகள் சேதம்

கிறேன்ட்பாஸ் கஜீமா வத்தையில் உள்ள குடியிருப்பு பகுதியில் பரவிய தீயினால் சுமார் 50 வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.

இன்று அதிகாலை 2.40 அளவில் தீ பரவியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

வீட்டில் ஏற்றப்பட்டிருந்த விளக்கினால் இந்த தீ பரவியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதுடன் இதுகுறித்த விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

குறித்த பகுதியில் 250 வீடுகள் அமைந்துள்ளதுடன் தற்போது தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

இதேவேளை தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு 5 தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

administrator

Related Articles