கிளங்கன் வைத்தியசாலை பணியாளர்கள் தொழிற்சங்க நடவடிக்கை

கிளங்கன் வைத்தியசாலை பணியாளர்கள் தொழிற்சங்க நடவடிக்கை


டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையின் சிற்றூழியர்கள் தொழிற்சங்கப் போராட்டமொன்றை முன்னெடுத்து வருகின்றனர்.

வைத்தியசாலையின் சிற்றூழியர்கள் இன்றைய தினமும் நாளையும் சுகயீன விடுமுறை எடுத்துக் கொண்டு பணிக்கு சமூகமளிக்காதிருக்கத் தீர்மானித்துள்ளனர்.

இதனால் வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

வைத்தியசாலையின் பல்வேறு பிரிவுகளில் கடமையாற்றி வரும் சிற்றூழியர்கள் 80 பேர் வரையில் இவ்வாறு தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சில கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தொழிற்சங்கப் போராட்டம் தொடர்பில் செய்திகளில் பார்த்து தெரிந்து கொண்டு பின்னர் சிகிச்சை பெற்றுக் கொள்ள வருமாறு வைத்தியசாலையின் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் நோயாளிகளை அறிவுறுத்தியுள்ளனர்.

administrator

Related Articles