கிளிநொச்சியில் நீரில் முழ்கி ஒருவர் பலி

கிளிநொச்சியில் நீரில் முழ்கி ஒருவர் பலி

கிளிநொச்சி  கல்மடுக்  குளத்தில் நீரில் மூழ்கி ஒருவர் காணாமல் போனவரின் சடல் கடற்படையினரின் உதவியுடன் இன்று மீட்கப்பட்டுள்ளது.

நேற்று (25) பிற்பகல் 3 மணியளவில் குறித்த நபர் மூன்று பேருடன் குளத்திற்கு சென்றதாகவும் குளத்துக்குள் இறங்கிய போது நீரில் மூழ்கி காணாமல் போன நிலையில் ஊரவர்களால் தேடும் பணி முன்னெடுக்கப்பட்டது.

இந்நிலையில் கடற்படையினரால் காணாமல் போனவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்த நபர் கிளிநொச்சி கல்மடுநகர் சம்புக்குளம் பகுதியை சேர்ந்த 27 வயதான இரத்தினம் லோகிதன் என்ற ஒரு பிள்ளையின் தந்தையாவார்.

உயிரிழந்தவரின் சடலம் கடற்படையினரால் மீட்கப்பட்டு கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. 

சம்பவம் தொடர்பான விசாரணைகளை தர்மபுரம் பொலிசார் மன்னெடுத்த வருகின்றனர்.

administrator

Related Articles