கிளிநொச்சியில் பிறந்த நாள், இறந்த நாளாக மாறிய கொடுமை

கிளிநொச்சியில் பிறந்த நாள், இறந்த நாளாக மாறிய கொடுமை

கிளிநொச்சியில் கூரிய ஆயுதமொன்றினால் தாக்கப்பட்டு ஒருவர் கொலைச் செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று பதிவாகியுள்ளது. 

கிளிநொச்சி வட்டக்கச்சி வைத்தியாலைக்கு அண்மித்த பகுதியில் குறித்த சம்பவம் நேற்று மாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது. 

பிறந்தநாள் தினமான நேற்று (10) வீட்டில் நின்ற அவரை வீட்டு வாசலில் வைத்து 18 வயது பூர்த்தி அடையாத இருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கியதாக பொலிசில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

குறித்த சம்பவத்தில் படுகாயமடைந்த குறித்த நபர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்த நபர் அதே பகுதியை சேர்ந்த  32 வயதான அருளம்பலம் துசியந்தன் 2 பிள்ளைகளின் தந்தை என பொலிசார் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் கையளி்கப்படவுள்ளது.

சம்பவத்தடன் தொடர்புடைய இருவரையும் பொலிசார் கைது செய்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளை தர்மபுரம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

administrator

Related Articles